கெடா அரசப் பேராளர் மன்றத் தலைவர் துங்கு சாலேஹுடின் இப்னி அல்மர்கும் சுல்தான் பாட்லிஷா, நாட்டில் நல்லிணக்கம், அமைதி ஆகியவை தொடர்ந்து நிலைத்திருக்க மக்கள் கண்டனக் கூட்டங்கள், கலகங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றில் கலந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான நாடு என்பதால் இங்கு எல்லாச் செயல்களும் ஜனநாயக அடிப்படையில் அமைந்திருத்தல் அவசியம் என்றாரவர்.
“நம் ஜனநாயக முறை மக்கள் தங்களுக்குத் தேவையான அரசாங்கத்தையும் தலைவர்களையும் தீர்மானிக்க இடமளிக்கிறது. அதற்காக எதிர்ப்பில் ஈடுபட வேண்டியதில்லை, சண்டையிட வேண்டியதில்லை”, என்றாரவர்.