டிஏபி-யை மலாய்க்காரர்களின் எதிரி என்று குறிப்பிட்ட பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை டிஏபி எம்பி ஒருவர் சாடினார்.
மலாய்க்காரர்களின் உண்மையான எதிரி பொதுச் சொத்தைக் கொள்ளையடிக்கும் அம்னோ தலைவர்கள்தான், கொள்ளையடித்த சொத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும், கொள்ளையடித்தவர்களை நீதிமுன் நிறுத்த வேண்டும் என்று போராடும் டிஏபி அல்ல என்று டோனி புவா கூறினார்.
நேற்று நஜிப், டிஏபியுடன் இணைந்து செயல்படும் பார்டி பிரிபூமி பெர்சத்து( பெர்சத்து)வால் மலாய்க்காரர்களுக்காக எப்படிப் போராட முடியும் என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
பெர்சத்துக்குவுக்குத் தலைமை தாங்கும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்டும் முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசினும் கடந்த காலங்களில், பெரும்பான்மை சீனர்களைக் கொண்ட டிஏபி இஸ்லாத்துக்கும் மலாய்க்காரர்களுக்கும் எதிரான ஒரு இனவாதக் கட்சி என்று சாடியிருப்பதை நஜிப் சுட்டிக்காட்டினார்.
அதற்கு எதிர்வினையாக புவா, 1எம்டிபி குளறுபடிகளை மூடிமறைக்க நஜிப் தொடர்ந்து இப்படிப்பட்ட அபாண்டங்களை அள்ளி வீசுவார் என்று கூறினார்.
“டிஏபி மலாய்க்காரர்களின் உரிமைகளையும் நலன்களையும் எதிர்க்கிறது என்பதற்குத் துளியளவு ஆதாரத்தைக்கூட நஜிப் இதுவரை காட்டியதில்லை”, என்றாரவர்.
பிரதமரின் உளரல்களுக்கு சரியான சாட்டை அடி கொடுத்துள்ளார் டோனி புவா.
பொதுச் சொத்தைக் கொள்ளையடிப்பவர்களே மலாய்க்காரர்களுக்கு எதிரிகள்!