மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நேற்று மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் பல மில்லியன் ரிங்கிட் பெறுமதியுள்ள சொத்துகள் சிக்கியதை அடுத்து அரசு உயர் அதிகாரிகள் மூவர் இன்று முறையே மலாக்கா, புத்ரா ஜெயா, கோத்தா பாரு ஆகிய நகரங்களில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டனர்.
விசாரணைக்கு உதவியாக ஆகஸ்ட் 22-வரை அம்மூவரையும் தடுத்து வைக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
மலாக்காவில் கைது செய்யப்பட்டவர் ‘டத்தோ’ பட்டம் பெற்றவர். புத்ரா ஜெயாவில் கைதானவர் ஒரு ‘டத்தோ ஸ்ரீ’ என பெர்னாமா கூறியது.
டத்தோ ஸ்ரீ கோலாலும்பூர் மாநகர் மன்ற உயர் அதிகாரி. அவர் நேற்று பிற்பகல் மணி 3.07க்கு கோலாலும்பூர் டிபிகேஎல் கட்டிடத்தில் கைது செய்யப்பட்டார்.
“அவருடைய வீட்டையும் சோதனை செய்து ஒரு பிஎம்டபுல்யு காரைப் பறிமுதல் செய்தார்கள். வீட்டிலிருந்தும் அலுவலகத்திலிருந்த்ம் ஆவணங்களை அள்ளிச் சென்றனர்”, என அவரின் வழகுரைஞர் அசிசுல் ஷரிமான் மாட் யூசுப் தெரிவித்தார்.
கோத்தா பாருவில் கைதானவர் தெனாகா நேசனல் பெர்ஹாட்டின் கிளை நிர்வாகி.
மூவர் கைது செய்யப்பட்டதை நேற்று அறிவித்த எம்ஏசிசி, அம்முவரின் வங்கிக் கணக்கில் மொத்தம் ரிம12 மில்லியன் இருந்ததாகவும் தெரிவித்தது. வங்கிக் கணக்கு முடக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் பெண்ட் ஹவுஸ், பங்களா, கார்கள் முதலியவை கைப்பற்றப்பட்டன.
சுறா மாடடவில்லை நெத்திலி மீன்கள் மட்டுமே மாட்டுகிறது,
உண்மையா கண் துடைப்பா? யாரையோ காப்பதற்காக விளையாடும் மக்கள் கவனத்தை திசை திருப்பும் சித்து விளையாட்டா?
சுறா மாடடவில்லை நெத்திலி மீன்கள் மட்டுமே மாட்டுகிறது,
“வெல்லம் திங்கறவனை விட்டுட்டு விரல் சூப்புறவனை அடிங்க” என்பதிற்கு உதாரணம் நமது நாட்டின் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் என்றால் மிகையாகாது.
அட நல்லா விசாரித்து பாருங்கப்பா மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் குறிப்பிட்டதெல்லாம் யாரவது நன்கொடையாக கொடுத்திருக்க போறாங்க. பிரதமருக்கு அதுவும் வெளிநாட்டில் இருந்து பில்லியன் கணக்கில் நன்கொடை கொடுக்க முக்கியஸ்தர்கள் இருக்கும்போது டத்தோ டத்தோஸ்ரீ போன்றவர்களுக்கு நன்கொடை கொடுக்க உள்நாட்டில் முக்கியஸ்தர்கள் இருக்க மாட்டார்களா என்ன டத்தோ டத்தோஸ்ரீ விருதுகளுக்கு களங்கம் விளைவிக்க கங்கணம் கட்டிக்கொண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் செயல் படுவதுபோல் தெரிகிறது.
எல்லாம் கண் துடைப்பு.
பெருச்சாளி திண்டு கொழுத்து விட்டது–அதை ஒன்றும் செய்ய முடியாது.