ஆகஸ்ட் 31 தேசிய நாளில் குண்டுவெடிக்கும் என்ற மிரட்டல் எதுவும் இல்லை என்றாலும்கூட போலீஸ் தொடர்ந்து விழிப்பு நிலையில் இருக்கும் என உள்நாட்டு பாதுகாப்பு, பொதுஒழுங்குத் துறை இயக்குனர் முகம்மட் சப்து ஒஸ்மான் கூறினார்.
போலீசார் எப்போதும் ஆயத்த நிலையில் இருப்பதோடு கண்காணிப்புப் பணிகளையும் மேற்கொள்வார்கள். பாதுகாப்பும் வலுப்படுத்தப்படும் என்றாரவர்.
கூட்டரசுப் பிரதேசத்தில் புக்கிட் அமான், நாடாளுமன்றக் கட்டிடம்,, கேளிக்கை மையங்கள் முதலிய இடங்களுக்கு அதிக கவனம் செலுத்தப்படும்.
“மாநகரின் முக்கியமான பகுதிகளில் கண்காணிப்பையும் போலீசாரின் எண்ணிக்கையையும் அதிகரிப்பது குறித்து கோலாலும்பூர் போலீஸ் தலைவருடன் விவாதித்திருக்கிறோம்”, என்று அவர் சொன்னார்.
“எந்த மிரட்டலையும் எதிர்கொள்ள முன்தகவல் தேவை. இப்போதைக்கு ஆர்ப்பாட்டங்கள் நடக்கப் போவதாகத்தான் தகவல் வந்திருக்கிறதே தவிர குண்டுவெடிப்பு குறித்து எந்தத் தகவலும் இல்லை”, என்றாரவர்.
– Bernama
(POL + IS = POLIS) POLகூட IS இணைந்து இருக்கும்போது குண்டுவெடிப்பு மிரட்டலா ? உங்களுடைய நகைச்சுவைக்கு அளவே இல்லையா ?