மலேசிய கொடிகளைப் பறக்கவிடாத கடைகளுக்கு அபராதம் விதிக்கும் பரிந்துரையை எம்பிஎஸ்ஜே நிராகரித்தது

mpsjசுபாங்    ஜெயா    முனிசிபல்    மன்றம்,  ஆகஸ்ட்  15-இலிருந்து   செப்டம்பர்  16வரையிலான    தேசிய   நாள்  கொண்டாட்டங்களின்போது   ஜாலோர்  கெமிலாங்கைப்    பறக்க    விடாத   கடைகளுக்கு   அபராதம்   விதிக்கப்படாது  என   இன்று   அறிவித்தது.

அபராதம்  விதிக்கப்படும்  என்று மன்றத்     தலைவர்    நோர்   ஹஷிம்        ஏற்கனவே   அறிவித்திருந்தது  ஒரு  பரிந்துரைதான்   என்றும்   அப்பரிந்துரை   நிராகரிக்கப்பட்டது   என்றும்    கவுன்சிலர்    பூய்   வெங்   கியோங்   கூறினார்.

“நேற்று   கூடிய    குழு  அதை   நிராகரித்தது.

“நாட்டுப்பற்றை   வலுக்கட்டாயமாக   திணிக்க  முடியாது.   நாட்டின்மீது   உங்களுக்குப்   பற்றிருக்குமானால்   அது   தானாக   வெளிப்படும்”,  என  பூய்   கூறினார்.