சிவப்புச் சட்டை மிரட்டல் கண்டு பெர்சே பயந்து விடாது

marinaபெர்சே  பேரணி   நடக்கும்போது   சிவப்புச்  சட்டைப்  பேரணியும்   நடத்தப்படும்  என   சுங்கை   புசார்   அம்னோ  தொகுதித்   தலைவர்   ஜமால்  யூனுஸ்    விடுத்துள்ள  மருட்டலால்   பெர்சே   பயந்துவிடாது.

தேர்தல்   சீரமைப்புகாக   போராடும்  பெர்சே   அமைப்பின்  தலைவர்   மரியா  சின்   அப்துல்லா   இவ்வாறு   கூறினார்.

“இரு  தரப்புக்குமே  பேரணி   நடத்த  உரிமை   உண்டு.  கூட்டரசு  அரசமைப்பு   அதை   வழங்குகிறது”,  என்றவர்   இன்று  பெட்டாலிங்  ஜெயாவில்  நடைபெற்ற   செய்தியாளர்  கூட்டமொன்றில்   கூறினார்.

பேரணிகள்  சீராக   நடப்பதை  உறுதிப்படுத்தும்   பொறுப்பு   போலீசாருடையது  என்றாரவர்.

சிவப்புச்  சட்டைப்  பேரணியும்   நடத்தப்படும்    என்று   மிரட்டல்  விடுக்கப்பட்டிருப்பதால்   பெர்சே   பேரணி   இரத்துச்   செய்யப்படுமா  என்று  கேட்கப்பட்டதற்கு   மரியா   இவ்வாறு    கூறினார்.

“எங்கள்  முடிவில்  மாற்றமில்லை”,  என்றாரவர்.

இதனிடையே   சமூக   ஆர்வலர்    ஹிஷாமுடின்  ரயிஸ்,   ஆகஸ்ட்  27   #Tangkap MO1  பேரணியை     ஏதாவது    ஒரு   விளையாட்டு   அரங்கில்  வைத்துக்கொள்ளலாமே    என்று   கூறப்பட்டிருப்பதை   நிராகரித்தார்.

“விளையாட்டு  அரங்கில்   என்ன  செய்வது,  பந்து  விளையாடுவதா?   நாங்கள்   ஆர்ப்பாட்டம்   செய்ய  விரும்புகிறோம்.  பந்து   விளையாட  அல்ல”,  என்றார்.