‘#TangkapMO1’பேரணிக்கு போலீஸ் அனுமதி

 

Tangkapoked‘#தங்காப் மலேசியன் அதிகாரி1’ பேரணி நடத்துவதற்கு போலீசார் அதன் ஏற்பாட்டாளர்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

இப்பேரணி ஆகஸ்ட் 27 இல் கோலாலம்பூர் டாத்தாரன் மெர்டேக்காவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால், பேரணி டாத்தாரான் மெர்தேக்காவில் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதால் அதற்கான அனுமதியை கோலாலம்பூர் நகராட்சி மன்றத்திடமிருந்து (DBK) பெற வேண்டும் என்று போலீசார் பணித்திருப்பதாக இப்பேரணியின் ஏற்பாட்டுக்குழுவின் பேச்சாளர் அனிஸ் ஷியாபிஹா முகமட் யூசுப் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

இப்பேரணி நடத்துவது  பற்றி  போலீசாருக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளோம் என்றும், டிபிகேஎல்லுக்கு டாத்தாரான் மெர்தேக்காவில் கூடுவதற்கு அனுமதி கோரும் கடிதத்தை தாக்கல் செய்து விட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

கோலாலம்பூர் நகர மேயரின் உதவியாளர் கடிதத்தை பெற்றுக் கொண்டு அம்மனு உடனடியாகப் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்ததாகவும் அனிஸ் கூறினார்.

டாத்தாரான் மெர்தேக்காவில் பேரணி நடத்துவதற்கான அனுமதி கோரும் மனு நிராகரிப்பட்டால், பேரணியை அங்கு நடத்துவீர்களா என்று கேட்கப்பட்டதற்கு பதில் அளித்த அனிஸ், அமைதியாக ஒன்றுகூடல் சட்டம் 2012 இன் விதிகளுக்கு ஏற்ப வேண்டிய அனைத்தையும் செய்துள்ளோம்  என்று  அவர் வலியுறுத்தினார்.