கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூரிடம் ஊழல், பணச் சலவை விவகாரம் தொடர்பில் விசாரணைக்குத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கோலாலும்பூர் மாநகராட்சி மன்ற (டிபிகேஎல்) இயக்குனர் பற்றி வினவியபோது அவர் சிறிது ஆத்திரப்பட்டார்.
“அவர்களின் வேலையைத் தவிர, வேறு எதுவும் தெரியாது. எதற்காக என்னிடம் கேட்கிறீர்கள்?
“இது நியாயமல்ல. எம்ஏசிசி (மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் எதற்காக இருக்கிறது? என்னை நீங்கள் கேட்கும் முறை சரியல்ல”, என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
விசாரணை முடியும்வரை அந்த டிபிகேஎல் இயக்குனர் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தெங்கு அட்னான் தெரிவித்தார்.
நேற்று, தெங்கு அட்னான் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அந்த ‘டத்தோ ஸ்ரீ’ பற்றிக் குறிப்பிட்டபோது அவர் ஒரு நல்ல அதிகாரி, கடமையே கண்ணானவர், நல்ல முடிவுகளைச் செய்யும் திறன் வாய்ந்தவர் என்று வருணித்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஓராண்டில் இரண்டு தடவை அவருக்குப் பணி உயர்வு வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார். அதற்காக அவரின் சக ஊழியர்கள் பொறாமை கொண்டிருந்தார்கள் என்றும் அவர் சொன்னார்.
“இதெல்லாம் வேலை இடக்த்தில்……அதற்கு அப்பால் அவர் என்ன செய்கிறார் என்பது எனக்குத் தெரியாது”, என்றாரவர்.
அமைச்சர்கள் எவ்வழியோ அவ்வழியே மாநகராட்சி மன்ற தலைவர்களும் என்று நினைத்து கொண்டிருப்பவர்களுக்கு உங்களது ஆத்திரம் அது உண்மைதான் என்று உறுதியாக நம்ப வேண்டியிருக்கிறது.
இவனுக்கு எதுவுமே தெரியாதாம்.நாங்க நம்பிட்டோம்.ஊழலின் மொத்த உருவமே அம்னோதான்.
தேசிய முன்னணியில் ஒருவன் கூட உண்மை கிடையாது–எல்லாருமே ஊழல்வாதிகள்– இல்லாவிடில் குரங்கு பிடியாய் ஆட்சியில் இருக்க எல்லா தில்லுமுல்லும் செய்ய மாட்டான் கள்– நெல்சன் மண்டேலாவின் கால் தூசிக்கு கூட சமானம் இல்லை- ஸுமாவும்தான்.
கூட்டரசுபிரேச அமைச்ச்ர் நீதானே உன்னிடம்தான் கேட்க வேண்டும்..