கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூரும் கோலாலும்பூர் மேயர் அமின் நோர்டின் அப்துல் அசீசும் அவர்களின் சொத்து விவரங்களை அறிவித்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும் என பிகேஆர் தொடர்ப் இயக்குனர் பாஹ்மி பாட்சில் கேட்டுக்கொண்டார்.
அண்மைய ஊழல் விவகாரத்தை அடுத்து அமைச்சிலும் மாநராட்சி மன்றத்திலும் சொத்து விவரங்களை அறிவிக்கும் முறையில் சீரமைப்புச் செய்யும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வேளையில் அவர் இவ் வேண்டுகோளை முன்வைத்தார்.
“வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாட்சிக் கோட்பாடுகளுக்குத் தங்களின் கடப்பாட்டைக் காண்பிக்கும் வகையில் தெங்கு அட்னானும் அமின் நோர்டினும் அவர்களின் சொத்து விவரங்களை உடனடியாக, பகிரங்கமாக அறிவித்து தங்களின் அதிகாரிகளுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ வேண்டும்”, என பாஹ்மி ஓர் அறிக்கையில் கூறினார்.
வேலை இடத்தில் சம்பாதித்த சொத்து கணக்கா ? அல்லது
அதற்கு அப்பால் சம்பாதித்த சொத்து கணக்கா ?
என உங்களையே திக்குமுக்காட வைக்க போகிறார்கள்.