பிரதமர்: நாட்டுப்பற்று என்பது கொடி பறக்க விடுவதற்கும் மேலே

pmஜாலோர்  கெமிலாங்கைப்   பறக்க  விடுவதோ,    நாட்டுப்  பண்ணைப்  பாடுவதோ   ருக்குன்நெகராவைக்  கடைப்பிடிப்பதாக   உறுதிமொழி  எடுத்துக்  கொள்வதோ   மட்டும்   நாட்டுப்பற்றல்ல   என்கிறார்  பிரதமர்  நஜிப்   அப்துல்   ரசாக்.

அகப்பக்கத்தில்   ஆகஸ்ட்  31 தேசிய   நாள்  கொண்டாட்டம்    பற்றி   எழுதியுள்ள  நஜிப்,  நாட்டுப்பற்று   என்பது  பல  நிலைகளைக்   கொண்டது  என்றார்.

முதல்  நிலை,  நாட்டுக்கு  நன்மை   செய்யும்  நோக்கத்துக்காக   மலேசியர்கள்    கைகோர்ப்பது.

“வாழ்க்கைத்   தரத்தை    உயர்த்துவதற்கு   நாம்  செய்த,  செய்யும்  ஒவ்வொரு  வேலையும்   நாட்டுப்பற்று  உணர்வைக்   கொண்டிருக்கிறது”,  என்றாரவர்.

இரண்டாம்  நிலை,   தேவையுள்ளோருக்கு   உண்மையிலேயே  உதவுவதல்.

மூன்றாம்  நிலை,   நாட்டின்   நல்லிணக்கத்தையும்    இறையாண்மையையும்   பாதுகாத்தல்,  அதற்காக  உயிரையும்  தியாகம்  செய்யத்   தயாராக  இருத்தல்.

நம்  பாதுகாப்புப்  படையினரின்  தியாகங்கள்   இந்த   வகையைச்   சேர்ந்தவை.

நாட்டின்  நல்லிணக்கம்   காக்கும்   பொறுப்பு    மக்களுக்கும்  உண்டு  என  பிரதமர்  கூறினார்.