1எம்டிபி விசாரணையில் ஒரு முக்கிய நபரான தொழில் அதிபர் காடெம் அல்-குபாய்சி, அபு டாபியில் கைது செய்யப்பட்டார்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மாற்றான் பிள்ளை ரிசா அசிசும் தொழில் அதிபர் ஜோ லாவும் ஆகஸ்ட் 22-இல் எதிர்வாதம் செய்ய உத்தரவிடப்பட்டிருப்பதாக செய்தி வந்துள்ளதை அடுத்து அல்-குபாய்சி கைது செய்யப்பட்டது தெரிய வருகிறது.
ரிசா அசிசும், ஜோ லாவும் அமெரிக்க நீதித்துறை (டிஓஜே) வழக்குகளில் எதிர்வாதிகளாக குறிப்பிடப்பட்டிருப்பவர்கள்.
1எம்டிபி விவகாரத்தில் அவருக்குத் தொடர்பு உண்டு என்றும் அதற்காகத்தான் அவர் கைது செய்யப்பட்டார் என்றும் தகவலறிந்த வட்டாரங்களில்லிருந்து தெரிய வருவதாக வால் ஸ்திரிட் ஜர்னல்(WSJ) கூறியது.
ஆனால், வால் ஸ்திரிட் ஜர்னலின் கூற்றை மலேசியாகினியால் உறுதிப்படுத்திக்கொள்ள இயலவில்லை.
அல்-குபாய்சி கடந்த வாரம் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஏப்ரலில் அவர் அமீரகத்திலிருந்து வெளியேறத் தடை விதிக்கப்பட்டது, அங்கு அவருடைய சொத்துகளும் முடக்கப்பட்டன.
கைது செய்யப்பட்டது பற்றி அல்-குயாய்சி இதுவரை கருத்துரைக்கவில்லை. அவரின் வழக்குரைஞரும் வாயைத் திறக்க மறுக்கிறார் என WSJ கூறிற்று.
இதன் வழியாவது உண்மை வெளிச்சத்திற்கு வருமா?