‘Aku Melayu’ என்றாலும் எல்லா மலேசியர்களுக்காகவும் போராடுவோம்: கெராக்கான் மெரா உத்தரவாதம்

aliPertubuhan Pembela Nasib Melayu (கெராக்கான்  மலாயு)    தலைவர்,   ‘அலி  திஞ்சு’  பெயரில்  பிரபலமாக  விளங்கும்   முகம்மட்  அலி  பஹாரோம்,  அந்த   அமைப்பின்   டி-சட்டையை  நேற்றிரவு   அறிமுகம்    செய்து  வைத்தார்.

அந்தச்  சிவப்புநிற  டி-சட்டையில்   ‘அக்கு  மலாயு’   என்று   எழுதப்பட்டிருக்கிறது.  அந்த  டி-சட்டையை  அணிந்துதான்     அந்த  அமைப்பைச்  சேர்ந்தவர்கள்     #TangkapMO1  பேரணிக்கும்   பெர்சே  பேரணிக்கும்   எதிராக   பேரணி   நடத்தப்  போகிறார்கள்.

ஆனால்,  இந்த   அமைப்பு   ‘சிவப்புச்  சட்டை’  இயக்கத்தைச்    சேர்ந்ததல்ல.    சிவப்புச்  சட்டை   இயக்கம்   வேறு.   அதற்கு  ஜமால்  முகம்மட்  யூனுஸ்   தலைவர்.  அதுவும்கூட   பெர்சே  பேரணியை   எதிர்க்கிறது.

“‘Aku Melayu’  என்பது   ஒரு  போராட்டம்,  உற்சாகமூட்டும்  ஒரு  உணர்வு.  நாங்கள்  இனம்   சார்ந்த   எதற்காகவும்   கோரிக்கை  விடுக்கவில்லை.  எல்லா  இனங்களுக்காகவும்   போராடுகிறோம்.

“மக்களால்   தேர்ந்தெடுக்கப்பட்ட   அரசாங்கத்தை   யாரும்  மிரட்டுவதற்கு அனுமதிக்க   மாட்டோம்.  சில   தரப்பினர்   அதைச்   செய்கிறார்கள்.  மலேசியாவில்    ஜனநாயகம்   பாதுகாக்கப்பட   வேண்டும்-  அதற்காகத்தான்  போராடுகிறோம்”,  என  அலி  பஹாரோம்   கூறினார்.