கோலாலும்பூர் மாநகராட்சி மன்ற(டிபிகேஎல்)த்தின் உரிமையை மதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ், “நான் உங்கள் வீட்டில் ஆர்ப்பாட்டம் செய்ய விரும்பினால், அனுமதிப்பிர்களா?” என்று வினவினார்.
‘தங்காப் எம்ஓ1’ பேரணி ஏற்பாட்டாளர்கள் டட்டாரான் மெர்டேகாவில் பேரணி நடத்த விரும்புவது குறித்து நஸ்ரி கருத்துரைத்தார்.
பேரணி ஏற்பாட்டாளர்கள் மெர்டேகா சதுக்கத்தில் பேரணிகளுக்கு இடமளிப்பதில்லை என்ற டிபிகேஎல்-இன் முடிவை மதிக்க வேண்டும்.
“போலீசிடம் அனுமதி கேளுங்கள். சட்டம் (அமைதிப் பேரணிச் சட்டம்) இருக்கிறது. போலீஸ் அனுமதிக்க முடியாது என்று சொல்லிவிட்டால் நடத்த முடியாது. இடத்துக்குச் சொந்தக்காரர்களின் அனுமதியையும் பெற வேண்டும்.
“டட்டாரான் மெர்டேகா டிபிகேஎல்லுக்குச் சொந்தமானது. அது முடியாது என்று சொன்னால், முடியாதுதான்”, என நஸ்ரி புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டம் செய்ய விடுவோம்! முன்பு அம்பிகா வீட்டிட்கு முன் அலி தீஞ்சு வாலை ஆட்டி ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதித்தோமே! எங்கள் சட்டம் இதையெல்லாம் அனுமதிக்கும்!
வீட்டிற்கும் டிபிகேஎல்லுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.
டிபிகேஎல் மக்கள் வரிப்பணத்தில் இருந்து செயல் படுவதால் அதில் மக்களுக்கு உரிமை உண்டு.வீடு தனி மனித சொத்து . அதில் பிறர் தலையிடுவதென்றால் வீட்டு முதலாளியடம் அனுமதி பெற வேண்டும். டிபிகேஎல் அனுமதி மறுப்பது அரசியல் வாதிகளின் அழுத்ததால் மட்டுமே.
இவனெல்லாம் பெரிய தலை. சாதாரண அறிவுகூட இல்லை– எது வீடு எது மக்கள் உரிமையுள்ள இடம் என்று கூட தெரியவில்லை- காரணம் பல ஆண்டுகள் இப்படி இருந்தே பழகி போய்விட்டது. அறிவு சூன்யம்.
இவர் என்ன சொல்ல வராரு ? நடத்தப்போவது பேரணியா அல்லது ஆர்பாட்டமா ? இந்த வித்தியாசம் கூட தெரியாத மந்திரி ! தொடப்ப கட்ட !! கோலாலம்பூர் யாருக்கு சொந்தம் ? யாருடைய வீடு ?? ஒரு நகரத்துக்கும் வீட்டுக்கும் உள்ள வித்தியாசம் கூட புரியாதவன் மந்திரி !! கோலாலம்பூர் எவன் அப்பன் வீடடும் சொத்தல்ல , இன்னும் சொல்லப்போனால் – கோலாலம்பூருக்கு சொந்தக்காரன் சீனர்கள் ! அணைத்து கட்டடங்களும் வீடுகளும் அவர்களதுவே !! உழைத்தான் , பெற்றான் !
நண்பர்களே! டத்தாரான் மெர்டேக்கா டிபிகேஎல்லுக்கு சொந்தமானது. மக்கள் பணம் தனி ஒரு MO1 னுக்கு சொந்தம் என்கிற போது, இந்த டத்தாரான் எம்மாத்திரம். இடி அமின் ஆட்சி கண்ணுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தெரியுதுங்கோ!
நஸ்ரி ஒரு வடிகட்டின முட்டாள் மந்திரி. மலேசியாவின் தரம் அற்ற தன்மைக்கு காரணம் இந்த ஆளும் கட்சி என்றால் அது மிகையாகாது.
அரசாங்கத்திற்கு எதிராக அமைதி பேரணி நடத்துபவர்கள் “ஆர்ப்பாட்டகாரர்கள்” பொது ஒழுங்குக்கு கேடு விளைவிப்பவர்கள்.
அராஜக ஆர்ப்பாட்டகாரர்கள் பொது ஒழுங்குக்கு கேடு விளைவித்து அரசாங்கத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பினால் “அமைதி பேரணி” இதுதான் BN அரசாங்கத்தின் சித்தாந்தம் என்பது அனைவரும் அறிந்ததே.