இந்தோனேசியாவின் சுமத்ரா, போர்னியோ தீவுகளின் ஆறு மாநிலங்கள் காட்டுத் தீ மூளலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளன.
சுமத்ராவிலும் போர்னியோவிலும் ஏற்கனவே சில காட்டுப் பகுதிகளில் தீப் பற்றி எரிவதாக தேசிய பேரிடர் மேலாண்மை வாரிய (பிஎன்பிபி) பேச்சாளர் சுதோபோ நுக்ரோஹோ கூறினார்.
கடந்த ஆண்டில் நிகழ்ந்ததுபோல் இவ்வாண்டிலும் காட்டுத் தீயால் மோசமான விளைவுகள் ஏற்படலாம் என அதிகாரிகள் அஞ்சுகின்றனர். கடந்த ஆண்டில் காட்டுத் தீயால் இந்தோனேசியாவுக்கு யுஎஸ்16 பில்லியன் இழப்பு ஏற்பட்டது. அது கடுமையான காற்றுத் தூய்மைக் கேட்டையும் ஏற்படுத்தியது. அண்டை நாடுகளும் அதனால் பாதிக்கப்பட்டன.
“செப்டம்பர்தான் கோடை காலத்தின் நடுப்பகுதி. அம்மாதத்தில்தான் காட்டுத் தீச் சம்பவங்கள் உச்சத்தை அடையும்”, என சுதோபோ தெரிவித்தார்.
இப்போது நாங்கள் அனுபவித்துக் கொண்டிருப்பது வீட்டுத் தீயா?