மலேசிய இந்தியக் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவைச் சார்ந்த சிலர் இன்று மலேசிய இலஞ்ச ஊழல் இலாகாவிடம் மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளி மேம்பாடு காரணமாகப் புகார் செய்ய உள்ளதாக அறிவித்ததை வரவேற்பதாகவும், அதற்கான முழு ஒத்துழைப்பையும் மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளி வாரியம் வழங்கும் என்றும் அதன் வாரியத்தலைவர் கா. உதயசூரியன் அறிவித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:
“தேசிய முன்னணி அரசியல் கட்சி கூட்டமைப்பில் இந்தியர்களின் பிரதிநிதியாக இருக்கும் மலேசிய இந்தியக் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவைச் சார்ந்த சிலர் இன்று மலேசிய இலஞ்ச ஊழல் இலாகாவிடம் மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளி மேம்பாடு காரணமாகப் புகார் செய்ய உள்ளதாக அறிகிறோம். இதற்கு முன்பு இது சார்பாகப் பத்திரிக்கையில் செய்தியும் வந்திருந்ததையும் அறிவோம்.
இலஞ்சம் மற்றும் ஊழல் சார்பாக நமது நாடு இன்று உலக அளவில் பேசப் பட்டும் அமெரிக்காவில் விசாரணைக்கு உட்பட்டும் உள்ளது. அவ்வகையில் இன்று குடிமக்களாக உள்ள அனைவரும் இலஞ்சம் மற்றும் ஊழல் என்பதில் இருந்து நாட்டை மட்டுமல்ல எந்த அமைப்பையும் காப்பாற்ற முன்வர வேண்டும். அவ்வகையில் மிட்லண்ஸ் பள்ளி விவகாரம் சார்பாக மஇகா இளைஞர் பிரிவு மலேசிய இலஞ்ச ஊழல் இலாகாவிடம் புகார் செய்யும் நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். அந்த விசாரணைக்கான முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்.
மஇகா இளைஞர் பிரிவு செய்யும் இந்த நடவடிக்கையானது இலஞ்சம் மற்றும் ஊழல் என்பதில் இருந்து நாட்டைக் காப்பாற்றப் புறப்பட்டுள்ள ஒரு புதிய மஇகா இளைஞர் அரசியலாக உருவாக வேண்டும். அந்தத் துணிவும் ஆற்றலும் இவர்களுக்கு உள்ளது என்று நம்புகிறோம். அதை விடுத்து இவர்கள் மிட்லண்ஸ் பள்ளி விவகாரத்தோடு நின்று விட்டால் அது கபாலி சொன்ன நண்டு கதையாகி, மஇகா இளைஞர் பிரிவு நகைப்புக்கு உட்பட்டுவிடும்.
2008ஆம் ஆண்டில் மக்கள் கூட்டணி சிலாங்கூர் மாநில ஆட்சிக்கு வந்த பிறகு, சிலாங்கூர் மாநிலத்தில் பல மாற்றங்களைக் காண முடிந்தது. அதில் ஒன்றுதான் நமக்கெல்லாம் பெருமை சேர்க்கும் மிட்லண்ஸ் பள்ளியும் அங்குக் கட்டப்பட்டுள்ள மிட்லண்ஸ் மாநாட்டு மையமும். அதன் தொடக்கம் முதல் இன்றுவரை அதை முன்னின்று நடத்தி வரும் இந்தப்பள்ளியின் வாரியம் புதிய பள்ளியின் மேம்பாடு சார்பான அனைத்து விபரங்களையும் கணக்குகளையும் முறையாக வைத்துள்ளது. பள்ளி வாரியக்குழு முறையாக நிருவாகக் கூட்டங்கள் நடத்தி கணக்குவழக்குகளைச் சரிபார்த்து வருகிறது.
எங்களுக்கு ஊக்குவிப்பும் ஆதரவும் தந்துள்ள அனைத்து தரப்பினர்களுக்கும் எங்களது நன்றியை பதிவு செய்கிறோம். அதோடு வரும் 27.08.2016 (சனிக்கிழமை) காலை 11.00 மணிக்கு மிட்லண்ஸ் மாநாட்டு மையத்தின் கீழ்ப்பகுதியில் ஒரு செய்தியாளர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம். அதில் பத்திரிக்கை செய்தியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கா. உதயசூரியன், தலைவர், மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளி வாரியம், 24.8. 2016.”
அவ்வப்பொழுது எதையாவது கிளப்பி ம இ க வை விளம்பரம் படுத்துகிறார்கள் அவ்வளவுதான்.காரணம் ம இ க மக்களிடம் இருந்து மறைந்து வருவதால்.
மலேசிய இந்தியக் காங்கிரஸ் கட்சியில் எத்தனையோ பிரச்சனனைகள் உள்ளன. ஒரு தமிழ் பள்ளியை வைத்து விளையாடுவது மகா முட்டாள் தனம். அதன் வாரியத்தலைவர் கா. உதயசூரியன் அறிவித்துள்ளார் முடிந்தால் தாரளமாக மலேசிய இலஞ்ச ஊழல் இலாகாவிடம் மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளி பற்றி புகார் செய்யலாம் என்று சொல்லிவிட்டது. ஆனால் கட்சியின் இளைஞர் பிரிவு முன்பு போல் இல்லை திரு. மோகன் இருந்த சமயம் மிகவும் சிறப்பாக இருந்தன ஆனால் இப்போ ஏன் என்று தெரியவில்லை ஒரு சிறப்பான தமிழ் பள்ளியை வைத்து விளையடுகிறது. இப்போது இருக்கும் பள்ளிகைலேயே மிகவும் சிறப்பான ஒரு தமிழ் பள்ளி மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளி. முன்பு ஒரு தான தலைவன் இருந்தான் அப்போ எங்கேட போனிர்கள். அப்போ போய் நீங்கள் இந்த வேலையை செய்து இருந்தால் நாம் இனம் எங்கோ போய் இருக்கும். செய்யவில்லேயே. இப்போ அப்படி இல்லை ஒரு நொடியில் தெரிந்து விடும். நாம் செய்யும் தவறுகள். பேசாமல் போய் மலேசிய இந்தியக் காங்கிரஸ் இருக்கும் பிரச்சனைகலை பார்க்கவும். அடுத்த தேர்தலில் என்ன நடக்கும் என்று யோசிக வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். அதுவும் இளைஞர் பிரிவு பங்கு அதிகாமாக தேவை படுகிறது. இதை நம் தமிழ் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுகே தெரியும்.
ம.இ.க. காரர்களுக்கு பணம் வராததால் அங்கெல்லாம் முட்டுக் கட்டை போடுவதே அவர் வேலை. எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்தில் அமீனாவின் பேச்சைக் கேட்டுக் கொண்டு ஆடுகின்றார் போலும். மைக்கா ஹோல்ட்டிங்ஸ், MIED, மிளகாய் குப்பம் ஊழல் என்று அடுக்கிக் கொண்டே போகலாமே! அப்பொழுதெல்லாம் பேசா மடந்தைகளாக இருந்தவர்களுக்கு இன்று பேச முடிகின்றதுதென்றால் இதற்கு வாங்கிய கூலி எவ்வளவோ?
24 மில்லியனுக்கு ஒரு தமிழ்ப்பள்ளி கட்டும் குத்தகை கொடுக்கப்பட்டுள்ளது. மஇகா இளைஞர் பிரிவு போராடுமா? இதில் மிட்லண்ஸ் போல் 5 கட்டலாம். அந்த சிவராஜ் இதற்கு ஒரு பதிலை தர வேண்டும்.
அங்கே – ஒலிம்பிக்கில் வென்று பதக்கம் பெற்ற சீனாக்காரனுக்கு சீனாக்கார அமைப்புக்கள் நான் முந்தி நீ முந்தி என்று பணத்தையும் வீடுகளையும் அள்ளி அள்ளி வழங்குகின்றன. இங்கே – தமிழனிடம் தமைழனை தமிழனே காட்டிக் கொடுக்கும் புத்தி இன்னும் மாற வில்லையே…
மலேசிய இந்தியக் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவினர் மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளி மேம்பாடு காரணமாகப் புகார் செய்ய நேர்ந்து அதில் ஏதும் ஊழல் நடைபெறவில்லை என்று நிரூபனமானால் மண்ணாக்கட்டி இயக்கத்தின் இளைஞர் பிரிவை கலைத்து விட இளைஞர் பிரிவினர் தயாரா? இதை ஒரு சவாலாகவே அறிவிக்கிறேன்..ஏற்ற்க்கொண்டு தமிழன் என்பதை நிரூபியுங்கள்.
வணக்கம். சகோதரர் சிராஜ் அவர்களே, முதலில் நான் ஒரு அரசியல் வாதி அல்ல. சமூக வாதி. இந்த நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று பெரும்பாலோர்க்கு தெரியும். உங்கள் உட்பட. எதிர் கட்சி காரர்களை எதிரியாக நோக்குவது ம இ க காரர்களுக்கு புதிதல்லவே! மாட்டு கார வேலனாக மாறுவதும் வேண்டியவரிடத்தில் மடியிடுவதும் சிலருக்கு கைவந்த கலை. தவறாக தங்களையும் வேடதாரியாக காண்பித்து கொள்ளாதீர்கள். எனக்கு மகிழ்ச்சிதான் தாராளமாக நடவடிக்கை எடுங்கள். அப்போதுதான் உண்மையான உண்மை என்பது உலகுக்கு தெரியவரும். நன்றி வாழ்க தங்கள் தொண்டு.
இதுதான் கபாலி சொன்ன கதையோ?
லஞ்ச ஒழிப்பை பற்றி பேச ம. இ. கா . காரனுக்கு எந்த தகுதியும் கிடையாது !! தானை தலைவன் !! தமிழ் பள்ளிகளின் காவலன் !! தமிழ் தாய் பெற்ற தவப்புதல்வன் !! என்றெல்லாம் கோஷம் போட்டு !! ம . இ . கா . காரன் ஒருவன் பின்னால் சுத்தி கொண்டிருந்த முட்டாள் கூட்டம் நாங்கள் !! அரசாங்கம் வழங்கிய தமிழ் பள்ளி மானியத்தை திருடி தின்றார்கள் !! என்ற கள்ள நாடகம் காப்பாரில் அரங்கேறியதும் !! கூனி குறுகி போனோம் !! பணம் இருந்தும் ,அரசாங்கம் உதவி புரிந்தும் ,மக்களுக்கு அதை தரவேண்டிய தலைவரும் ! நாடாளு மன்ற உறுப்பினரும் அதை வாயில் போட்டுக்கொண்டதால் ! தமிழ் பள்ளி மாணவர்கள் கொண்டைனர் றில் படிக்க வேண்டிய கட்டாயத்தில் !! ஆசிரியர்களும் மக்களின் அடி உதைக்கும் பயந்து ! வசை மொழியால் ஆசீர் வாதம் பெற்று பாடம் நடத்தியதை கண்ணால் கண்டு முடங்கி போனவர்கள் நாங்கள் !!
மிட்லாண்ட்ஸ் பள்ளி மண்டபவம் அதன் தொடர்பான விளக்கமும் , நிலம் தொடர்பான விளக்கமும் தெரிந்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தாராளமாக பள்ளிக்கு வரும் சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு வாருங்கள்.காத்துக் கொண்டு இருப்போம்..
இந்நாட்டு தமிழர்கள் பிராந்திய மற்றும் சர்வதேச கட்ட அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல் பட வேண்டும்.அப்போதுதான் இங்குள்ள மூட்டை பூச்சுகளை அடக்க முடியும்.இல்லையேல் இது போன்று போராட்டங்கள் அன்றாட காட்சியாகிவிடும்…AirAsia ஒரு நல்ல உதாரணம்.
ம இ கா வின் ஓட்டையை மறைக்க மக்களை திசை திருப்பும் நடவடிக்கை . வரும் சனிக்கிழமை இந்த சனியன் பிடித்த ம இ கா கூட்டம் புத்தி கெடாமல் இருக்க வாரியம் உண்மையான சரியான விளக்கம் தரும் என எதிர்பார்ப்போம் . இதே போல் எம்மிஸ்ட் டேப் விவகாரத்திலும் மஇ கா நடவடிக்கை எடுக்குமா ?
ஒரு இளைஜர் தலைவன் நீல படம் எடுத்தான் ! ஒருவன் தன் வங்கி கணக்கில் லச்சங்கள் எப்படி புகுந்தது என்று தெரியாது என்றான் ! ஒருவன் மிளகாய் நடுவதற்கும் ! மாடு மேய்ப்பதற்கும் சொல்லி கொடுத்தான் !
இதுதான் ம .இ . கா .வின் வரலாறு ! பழமொழி ஒன்று உண்டு ! செய்யற வேலையை விட்டு போட்டு ,சேனை ஆட்டுக்கு —– புடுங்கற வேலை என்பார்கள் ! அதுதான் ம .இ
கா காரன் செய்கிறான் !
ஒன்றும் பெரியதாக படவில்லை. இந்த கும்பல் முதலில் நம் வயிட்றில் அடித்த ஒரு மகா பெரிய பெரிச்சளியை பட்றி மலேசிய இலஞ்ச ஊழல் இலாகாவிடம் புகார் செய்தால் ஒட்டு மொத்த இந்திய சுமுதாயம் உங்களுக்கு நன்றி சொல்ல நினைக்கும் அதை விடுது நல்ல இருக்கும் சிறப்பாக இருக்கும் ஒரு பள்ளியை பார்து அதன் பல்லை புடுங்குவது வேடிக்கையாக உள்ளது. திரு. கா. உதயசூரியன் சொல்வது போல் நாம் காலை 11.00 மணிக்கு காத்துக் கொண்டு இருப்போம்.. அவர்களின் பயணம் எதுவரை செய்கின்றது என்று.