அம்னோ, பினாங்கு பிஎன் தலைவர் பதவியை பினாங்கு கெராக்கான் தலைவர் டெங் சாங் இயோவிடமிருந்து பறித்துக்கொள்ளத் திட்டமிடுவதாகக் கூறப்படுவதை அம்மாநில பிஎன் தலைவர்கள் மறுத்தனர்.
ஞாயிற்றுக்கிழமை, தாசெக் குளுகோரில் டெங்கிடம் அது குறித்து கேட்டதற்கு, “எனக்குத் தெரியாது. யார் அப்படிச் சொன்னார்களோ அந்த கெராக்கான் மூத்த தலைவரிடமே அது பற்றிக் கேளுங்கள்” என்றார்.
கெராக்கான் தலைவர் ஒருவர் கெராக்கான் கட்சி பலவீனமாக இருப்பதால் மாநில பிஎன் தலைவர் பொறுப்பை அம்னோ எடுத்துக்கொள்ள விரும்புவதாக கூறினார் என இணைய செய்தித் தளம் ஒன்றில் அறிவிக்கப்பட்டிருந்ததைதான் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
இதனிடையே, பினாங்கு அம்னோ தொடர்புக்குழுத் தலைவர் சைனல் அபிடின் ஒஸ்மான், டெங்கிடமிருந்து அப்பதவியை எடுத்துக்கொள்வது பற்றி மாநில அம்னோ விவாதித்ததே இல்லை என்றார்.
“அந்தப் பதவிக்காக நாங்கள் என்றும் சண்டை போட்டதில்லை”, என்றாரவர்.