ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஆசியான் விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் வாழ்நாள் முழுக்க தன் விமானங்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என ஏர்ஏசியா அறிவித்துள்ளது.
“இந்த ஒலிம்பிக் போட்டி ஆசியான் பெருமைப்படத்தக்க ஒன்றாக அமைந்தது. ஆசியானில் வேர்களைக் கொண்ட ஏர்ஏசியா நமக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தவர்களுக்கு வெகுமதி அளிக்க விரும்புகிறது”, என அதன் தலைமை செயல் அதிகாரி டோனி பெர்னாண்டஸ் கூறினார்.
வெள்ளி, வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கும் தக்க பரிசுகள் வழங்கப்படும் என பெர்னாண்டஸ் தம் முகநூல் பக்கத்தில் கூறினார்.
வாழ்க! வாழ்கவே! டோனி பெர்னாண்டஸ். உங்களால் முடியும். என் போன்ற ஏழைகளையும் விமானத்தில் பறக்க வழி செய்த புண்ணியவான் நீங்கள் அன்றோ. உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் அன்றும் எங்களுக்கு தீபாவளியே. நன்றி தலைவா. ( இது அரசியல்/ கூத்தாடி தலைவா அன்று).
நல்லதொரு செய்தியை அறிவித்த திரு.டோனி அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
குறைந்த செலவு விமானசேவை நிறுவனமான AIRASIA தங்கபதக்கம் வென்ற ஆசியான் விளையாட்டு வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் இப்படியொரு சலுகை வழங்கும்போது,
நமது நாட்டு விமான நிறுவனமான MAS பதக்கம் வென்ற நமது நாட்டு வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் இப்படியொரு சலுகை அறிவிக்காதது பெரும் ஏமாற்றம்.
MAS ல் எவ்வளவு ஊழல் என்று யாருக்கு தெரியாது?