டான்ஸ்ரீ குழுவில் மொத்தம் நால்வர், அவர்களில் ஒருவர்தான் மற்றவர்களைக் காட்டிக்கொடுத்திருக்க வேண்டும் என டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார்.
இதற்கு முன்னர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எதிராக சதி செய்ததாகக் கூறப்படும் டான்ஸ்ரீ மூவரில் ஒருவர்தான் துரோகியாக மாறிக் காட்டிக்கொடுத்தார் என்று மகாதிர் கூறி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“ஆமாம், ஒருவரைச் சேர்த்துக்கொள்ளவில்லை. உண்மையில் அவர்கள் நால்வர், ஒருவரை விட்டு விட்டோம்.
“ஒருவேளை அவர் காட்டிக்கொடுத்திருக்கலாம்”, என முன்னாள் பிரதமர் புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அந்த ஒருவர் இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்காரா (அவரும் டான்ஸ்ரீதான்) என்று வினவியதற்கு, “எனக்குத் தெரியாது, எனக்குத் தெரியாது. நான் கைது செய்யப்படுவதை விரும்பவில்லை”, என்றார்.
வார இறுதியின்போது மகாதிர், காட்டிக்கொடுக்கும் வஞ்சக செயல் மட்டும் நடக்காதிருந்தால் பிரதமர் இந்நேரம் நீதிமுன் நிறுத்தப்பட்டிருப்பார் என்று கூறி இருந்தார்.
உண்மை உறங்கலாம். ஆனால் அந்த உண்மையை உறங்க வைப்பதற்கு கெவின் மொரைசை நிரந்திரமாக உறங்க வைத்தது எவ்வகையில் நியாயம்? அதற்கான பாவ பலனை அனைவருமே அனுபவிப்பீர்.
கட்சி மாறியவருக்குக் கிடைத்த மில்லியன்கள் எவ்வளவோ? உண்மையறிந்து அதனை மூடி மறைத்தவருக்குக் கிடைத்தது என்னவோ? உண்மைகள் கசியப்படுவதால் மேல்நிலை மக்கள் எவ்வளவு கீழ்த்தரமானவர் என்பதை மக்கள் அறிந்து கொண்டனர். நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்? உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.
மாமா மகாதீரே ! நீங்கள் ஊட்டி வளர்த்த இனத்தை நீங்களே “துரோகிகள்” என கூறும் காலம் வரும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டீர்கள். என்ன செய்வது எல்லாம் விதி.