முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் ‘பங்சா ஜோகூர்’ குறித்து மனம்போன போக்கில் கருத்துரைப்பதை விடுத்து வாயைப் பொத்திக் கொண்டிருப்பது நல்லது என ஜோகூர் சுல்தான் சுல்தான் இப்ராகிம் இஸ்கண்டார் அறிவுறுத்தியுள்ளார்.
மகாதிர் நேற்று ஒரு கருத்தரங்கில் பேசியபோது ஜோகூர் தேசியவாதம் மலேசியாவுக்கு ஆகாது என்றும் அதன் விளைவாக கூட்டரசு உடைந்து போகலாம் என்றும் கூறியிருந்தார்.
“அது மகாதிரின் கற்பனை. அவர் குளவிக் கூட்டில் கைவைக்கிறார்.. என்னைக் கேட்டால், அவர் வாயை மூடிக் கொண்டிருப்பதே நல்லது என்பேன்”, என சுல்தான் கூறினார்.
மக்களைப் பல வகைகளிலும் பிளவுபடுத்திய மகாதிருக்கு ஒற்றுமை பற்றிப் பேசும் தகுதி இல்லை என்றாரவர்.
“இன்றைய பிரச்னைகளுக்கு மூல காரணமே மகாதிர்தான். என் மாநில விவகாரங்களில் தலையிடும் உரிமை அவருக்கு இல்லை. அவருடைய கோமாளித்தனங்களைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது”, என்று சுல்தான் குறிப்பிட்டார்.
“மக்களைப் பல வகைகளிலும் பிளவுபடுத்திய மகாதிருக்கு…”
மக்கள் மறந்து விடாமல் இருப்பதற்கு மலேசிய வரலாற்றில் இடம்பெற வேண்டிய வாசகங்களில் ஒன்று.
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ! என்பது போல் , மஹாதீருக்கு இந்த ஒரு சொல் போதும் என்று நினைக்கின்றேன் ! மலேசிய இந்திய மக்களை ஓரங்கட்டி வித்தைக்காட்டியது நீதானே ?? எம் இனத்தை நடு ரோட்டுக்கு அனுப்பிய உனக்கு சுல்த்தானின் இந்த அறிவுரை போதுமென்று நினைக்கின்றேன் !!
Anonymous! inge ezhuthi aagappovathu ondrumillai. nerla paarththu kelunga. aatchebanai illayendraal sollunga, naan azhaichchittu poren, intha Magathimiridam.
முன்னே போனா முட்டுது! பின்னே வந்தா எத்துது!
இந்த அறிவுரை இனவாத நாதேரிகளுக்கும் சாமிவேலுக்கும் அவர்கள் சகாக்களும் பொருத்தமானதே.
“மக்களைப் பல வகைகளிலும் பிளவுபடுத்திய மகாதிருக்கு…”
மக்கள் மறந்து விடாமல் இருப்பதற்கு மலேசிய வரலாற்றில் இடம்பெற வேண்டிய வாசகங்களில் ஒன்று.