மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியில் ஊழல் பற்றி முதலில் கேளுங்கள், பின்னர் கேட்டறிந்ததை எழுதுங்கள் – கா. உதயசூரியன்

midlands1தமிழ் நாளிதழ் மலேசிய நண்பனில், மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி பற்றி நிறைய எழுதப்பட்டுள்ளன. ஆனால், அவை தப்பானவை. அப்பள்ளியின் நிருவாகத்திற்கு பொறுப்பாளர்களாகிய எங்களிடம் எந்த ஒரு விளக்கமும் கேட்காமல் தான்தோன்றித்தனமாக வெளியிடப்பட்ட செய்திகள் அவை என்று மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியத்தின் தலைவர் கா. உதயசூரியன் அப்பள்ளியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

ஊழலை எதிர்க்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை. இந்நாட்டில் மிக உயர்மட்டத்திலிருந்து அடிமட்டம் வரையில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. ஊழலை எதிர்க்க வேண்டும். மஇகா இளைஞர் பிரிவு மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியில் ஊழல் நடந்திருப்பதாக மலேசிய இலஞ்ச எதிர்ப்பு ஆணையத்திடம் புகார் செய்துள்ளதாக செய்தி.

புகார் செய்வது மஇகா இளைஞர் பிரிவின் உரிமை என்று கூறிய உதயசூரியன், குற்றச்சாட்டிற்கு உள்ளாகிய பள்ளியின் மேலாளர் வாரிய உறுப்பினர்களிடம் அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு ஏன் விளக்கம் கோரவில்லை என்று கேட்டார். திருப்தியில்லை என்றால் அதன் பிறகு புகார் செய்திருக்கலாம் என்றார்.

மலேசிய நண்பனில் ஏதோ ஒரு பெயரில் தான் நினைத்ததை எவ்விதச் சான்றுகளும் இல்லாமல் எழுதும் நபர் யார் என்பதை அடையாளம் காட்ட அந்த பத்திரிக்கை முன்வர வேண்டும் என்றார் உதயசூரியன். பத்திரிக்கை விற்பனைக்காக அவதூறான செய்திகளை வெளியிடுவது ஒரு விபச்சாரத்திற்கு ஒப்பாகும் என்றார்.

செய்தியாளர்கள் தார்மீகப் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தார்மீகப் பொறுப்புடன் பதில்  அளிக்க வேண்டிய கடப்பாடும் தமக்கு உண்டு என்றாவர்.

மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி பற்றி மலேசிய நண்பனில் தான்தோன்றித்தனமாக வெளியிடப்பட்ட செய்தியில் மூன்று பகுதிகள் இருக்கின்றன: 1. பள்ளியின் நிலம், 2. கட்டுமானம், மற்றும் 3. பள்ளியின் மண்டபம்.

மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளிக்கு ஐ-சிட்டியில் நிலம் ஒதுக்கப்பட்டது என்றும், அந்த நிலம் என்னவாயிற்று என்று கேட்கிறார்கள்.

நிலம்

தமிழ்ப்பள்ளிக்கு நிலம் வேண்டும் என்று கல்வி இலாகாவை வற்புறுத்தியது உண்மை. விண்ணப்பம் செய்தது உண்மை. ஆனால், எந்த நிலமும் கொடுக்கப்படவில்லை என்பது மிகப் பெரிய உண்மை. நிலம் கொடுக்கப்பட்டதை உறிதிப்படுத்தும் அதிகாரப்பூர்வமான கடிதம் ஏதும் உண்டா? இல்லவே இல்லை என்று அதிரிட்டுக் கூறினார் உதயசூரியன்.

midlands2மாநில அரசால் பள்ளிக்கு எந்த நிலமும் ஒதுக்கப்படாத நிலையில் இங்குள்ள செக்சன் 7 இல் இரண்டு வரிசைகள் கொண்ட ரூமாபாஞ்சாங் போன்று 0.9 ஏக்கரில் இப்பள்ளி இயங்கி வந்ததை உதயசூரியன் சுட்டிக்காட்டினார்.

ஐசிட்டியில் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இங்கிருந்து 500 மீட்டர் தொலைவில் ஓர் இடுகாட்டு நிலம்இருந்தது. அதில்தான் நில ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சொன்னார்கள். அங்கு புதிய பள்ளியை கட்டுவதற்கு நாங்கள் மாநில அரசுக்கு நெருக்குதல் கொடுத்தோம்.

அவ்விடத்தில் 6 ஏக்கர் நிலம் கேட்டோம். ஆனால், அப்போது மந்திரி புசாராக இருந்த காலிட் இப்ராகிம் ஐ சிட்டி நிலத்திற்கு பதிலாகவேறு நிலங்களை கொடுக்க முன்வந்தார்.  ஐசிட்டியில் நிலம் கொடுக்க மறுத்த மந்திரி புசார் காலிட்டுக்கு எதிராக நாங்கள் போலீஸ் புகார் செய்தோம் என்று உதயசூரியன் மேலும் கூறினார்.

இறுதியில், தமிழ்ப்பள்ளியை அது இருக்கும் இடத்திலேயே கட்டுவது என்று பள்ளி வாரியமும் பெற்றோர் ஆசிரியர் சங்கமும்முடிவு எடுத்தது. பெற்றோர்களும் அதைத்தான் விரும்பினர்.

முதலில் 2 ஏக்கர் ஒதுக்கப்பட்டது, பிறகு 3 ஏக்கர் கொடுப்பதாக சொன்னார்கள். நாங்கள் 6 ஏக்கர் நிலம் வேண்டும் என்றோம். இறுதியாக 4 ஏக்கர் நிலம் என்று திட்டவட்டமாக முடிவெடுக்கப்பட்டது.

சிலாங்கூர் மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமாரிடம் பள்ளிக்கு நிலம் மட்டுமல்ல, கட்டடமும் வேண்டும்என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. அவர் வேண்டியதைச் செய்ய ஒப்புக்கொண்டார்.

கட்டுமானம்

மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 160 பேருக்கு முதலில் 6 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் என்ற பேச்சிலிருந்து 18வகுப்பறைக்கு உயர்ந்து. இறுதியில் 24 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம் எழுப்ப முடிவெடுக்கப்பட்டது என்றும் அதற்கு ரிம4 மில்லியன் செலவு ஆகும் என்றும் கணிக்கப்பட்டது என்று கூறிய உதயசூரியன், அக்கட்டுமானச் செலவில் ரிம 3 மில்லியனை சிலாங்கூர் அரசாங்கம் வழங்க ஒப்புக்கொண்டது. எஞ்சிய ரிம ஒரு மில்லியனை திரட்டும் பொறுப்பை பள்ளி வாரியம்  ஏற்றுக்கொண்டது என்றார்.

midlandsஇக்கட்டத்தில்தான் வீட்டுமனை மேம்பாட்டாளர் சைமன் மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி கட்டும் நடவடிக்கையில் ஈடுபடத்தொடங்கினார். இப்பள்ளியின் கட்டடப் பணி தொடங்கியது போது செலவும்ரி ம 4 மில்லியனிலிருந்து ரிம 4.9 மில்லியனுக்குஉயர்ந்தது. காரணம், இத்தமிழ்ப்பள்ளிக்கு சீனப்பள்ளிகளுக்கு ஈடான ஒரு மண்டபமும் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையால்கட்டுமானச் செலவு மேலும் அதிகரித்தது.

மேம்பாட்டாளர் சைமனும் முன்பணம் எதனையும் எதிர்பார்த்து காத்திராமல் கட்டுமான பணியைத் தொடங்கினார். சிலாங்கூர் மாநில அரசு ஐ-சிட்டி மூலமாக கிடைத்த ரிம 3 மில்லியன் பணத்தை ஷா அலாம் மாநகர் மன்றத்திடம் (எம்பிஎஸ்எ) ஒப்படைத்தது.எம்பிஎஸ்எ கட்டுமான செலவுக்கான பணத்தை படிப்படியாக வழங்கியது என்று கூறிய உதயசூரியன், இந்த பட்டுவாடாவில்  தங்களைச்  சார்ந்தவர்கள் எவருக்கும் தொடர்பில்லை என்றார்.

மண்டபம்

பள்ளிக்கு மண்டபம் கட்டும் திட்டத்தால் ஏற்பட்ட ரிம 1.9 மில்லியன் கூடுதல் செலவு பெரும் சுமையாக இருந்தது என்பதை வெளிப்படுத்திய உதயசூரியன், அதனைச் சமாளிக்க மண்டபத்தை மேம்பாட்டாளர் சைமனிடம் பிஒடி (Build, Operate and Transfer  ) என்ற ஒப்பந்த முறையில் கொடுத்திருப்பதாக தெரிவித்தார்.

இத்திட்டத்தை மிகத் தெளிவாக விளக்கிய அவர் அது முறையாக நடத்தப்பட்டு வருவதாக மேலும் கூறினார்.

குத்தகைக்கு கொடுக்கப்பட்டிருக்கும் மண்டபத்திலிருந்து கிடைக்கும் வசூலில் முதல் 10 ஆண்டுகளுக்கு பள்ளிக்கு 25 விழுக்காடும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு 30 விழுக்காடும் கொடுக்கப்படும் ஒப்பந்தம் இருப்பதாக அவர் தெரிவித்தார். அந்த மண்டப வாடகை இன்னமும் நாள் ஒன்றுக்கு ரிம 5,000 மாகத்தான் உள்ளது என்றார்.

ஆனால் பயன்படுத்துவோர் தங்களின் தேவைக்கேற்றவாறு மற்ற வசதிகளை கோருவதால் அதன் மொத்த வாடகையின் அளவு தேவைக்கேற்றவாறு ரிம 5,000 க்கும் அதிகமாக இருக்கும்என்றார்.

மண்டபத்தின் கட்டுமானம் பற்றிய விளக்கம்

பள்ளி மற்றும் மண்டபம் கட்ட ரிம 4.9 மில்லியன் ஆகும். மண்டபத்திற்கான குளிர்சாதன வசதி, ஒலி மற்றும் ஒளி சாதனங்கள், தோற்ற அமைப்பு போன்றவைக்கு ரிம 1 மில்லியன் செலவானது. இந்த மொத்த செலவில் ரிம 3 மில்லியன் மாநில அரசு வழியாகவும் பள்ளி வாரியம்   வழியாக ரிம 6 லட்சமும் வழங்கப்பட்டது. மீதக் கடன் ரிம 2.3 மில்லியன் இருந்தது. அதை மீட்டுக்கொள்ள மண்டபம் 10 வருட தவணை க்கு கொடுக்கப்பட்டது. அதேவேளையில் அடிப்படை மண்டப வாடகையில் இருந்து 25 விழுக்காடு பள்ளிக்கு கொடுக்கப்ப்ட வேண்டும் என்பதாகும்.

midlands4அதன் பிறகு மண்டபத்தை ஒரு நட்சத்திர மாநாட்டு மையமாக உருவாக்க மேலும் வசதிகள் மேம்படுத்தப்பட்டன. மேடையில் உள்ள எல்சிடி பலகை, மின்தூக்கி, படிக்கட்டுகள், மேலும் ஒரு சிறிய விருந்து மண்டபம், பிரமுகர் அறை போன்றவற்றுக்கு ரிம1.55 மில்லியன் செலவிடப்பட்டது. இதனை மீட்பதற்காக குத்தகை காலம் மேலும் 5 ஆண்டுகள் அதிகரிகப்பட்டது. தற்போது குத்தகையாளருக்கான கடன் ரிம 3.85 மில்லியன் ஆகும். ஒப்பந்தத்தின்படி பள்ளி வாரியம் இந்த பணத்தை நிறைவு செய்யும்  தருவாயில் குத்தகையாளர் மீண்டும் பள்ளி வாரியத்திடம் அனைத்து வசதிகளுடன் மண்டபத்தை ஒப்படைப்பார். இந்தஒப்பந்த காலம் 2028 இல் முடிவடைகிறது.

இந்த குத்தகையின் மூலம் கிடைக்கும் நிதி பள்ளி மாணவர்களின் உணவு மற்றும் இதர வசதிகளை அளிப்பதற்குபயன்படுத்தப்படுவதாகவும் உதயசூரியன் கூறினார்.

நம்பவே முடியவில்லை!

புதிய மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி கட்டி முடிக்கப்பட்ட பின்னர், சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவிலிருந்து 6 அதிகாரிகள் சோதனை மேற்கொள்வதற்காக பள்ளிக்கு வருகையளித்திருந்தாக அப்பள்ளின் முன்னாள் தலைமை ஆசிரியர் திருமதி வரலட்சுமி செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

பள்ளியை ஒவ்வொரு அங்குலமாகச் சுற்றிப்பார்த்து, ஆய்ந்து, அளவிட்டு பல மணி நேரத்தை பள்ளியில் கழித்த பின்னர்அவ்வதிகாரிகள் தம்மைச் சந்தித்து இவ்வளவு பெரிய பள்ளியை, இவ்வளவு சிறப்பாக, இவ்வளவு குறைந்த செலவில் கட்டி முடிக்கப்பட்டிருப்பதை தங்களால் நம்பவே முடியவில்லை என்று மகிழ்ச்சி தழும்ப தம்மிடம் கூறியதாக திருமதி வரலட்சுமி தெரிவித்தார்.

இரண்டு ரூமா பாஞ்சாங் போலிருந்த ஒரு பள்ளியை  4 ஏக்கர் நிலத்தில் மிகவும் திறமையாக ஒரு நவீன பள்ளியாக உருவாக்கியதோடு அதில் ஒரு மாநாட்டு மையத்தையும் உருவாக்கி அதன் வழி வருமானமும் கிடைக்கும் வகையில் பள்ளி வாரியம் செய்தது ஒரு  மகத்தான சாதனை என்றார்.

இது நம் அனைவருக்கும் பெருமை சேர்த்துள்ளது. இதில் குறை காண்பவர்களை நினைக்கும்போது மனம் நோகிறது என்றார் வரலட்சுமி.