பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் வங்கிக் கணக்கில் கிட்டத்தட்ட ரிம1 பில்லியன் இருந்ததாகக் கூறும் முகைதின் யாசின் அதற்கான ஆதாரத்தைக் காண்பிக்க முடியுமா எனத் துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடி வினவினார்.
“அவரிடம் ஆதாரம் இருந்தால் காண்பிக்கச் சொல்லுங்கள்”, என புத்ரா ஜெயாவில் செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் கூறினார்.
“அவர்(முகைதின்) பிரதமர்மீது குற்றம் சாட்டுகிறார். எனவே, அதற்கான ஆதாரத்தைக் காண்பிக்க வேண்டும். ஏதோ கேள்விப்பட்டதை வைத்து குற்றம் சாட்டக்கூடாது”, என ஜாஹிட் கூறினார்.
முன்னாள் துணைப் பிரதமரான முகைதின் யாசின், நஜிப்பின் வங்கிக் கணக்கில் அரபு நன்கொடை என்று கூறப்படும் ரிம2.6 பில்லியன் வந்து சேர்வதற்கு முன்பே ரிம1 பில்லியன் இருந்ததாக கூறியிருந்தார்.
முன்னாள் சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேல் மூலமாக அந்தத் தகவல் தமக்குத் தெரிய வந்ததாக முகைதின் சொன்னார்.
இவ்வளவு பேசும் துணைப் பிரதமரே! நம் நாட்டுப் பணத்தை சூறையாடிய MO1 யாரென்று உங்களுக்கு தெரியாதா?
umnovayum MIC yaiyyum எவனும் நம்புவதில்லை அது teriyatho இந்த ஜாவாவுக்கு