பாஸ் கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் ஹுசாம் மூசா பார்டி அமனா நெகாரா(அமனா)வில் சேரப் போவது பற்றி இன்றிரவு அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமனா தலைவர்கள் பலரும் அதை உறுதிப்படுத்தினார்கள். சாலோர் சட்டமன்ற உறுப்பினரான ஹுசாம், இன்றிரவு சைபர் ஜெயாவில் தம் முடிவை அறிவிப்பார் என்றவர்கள் தெரிவித்தனர்.

























