சிங்கப்பூரில் ஸிக்கா நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 82ஆக உயர்ந்தது.
கொசுக்களினால் பரப்பப்படும் ஸிக்கா நோய் முதன்முதலில் அமெரிக்க நாடுகளிலும் கரீபியனிலும் தோன்றியது.
இப்போது அந்நோய் சிங்கப்பூரிலும் பரவி உள்ளது. கருவுற்றிருக்கும் பெண்கள் இந்நோயால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் சிறிய தலைகளுடனும் முளை வளர்ச்சிக் குன்றியும் உள்ளனர்.
அதனால் கருவுற்றிருக்கும் பெண்கள் சிங்கப்பூர் செல்ல வேண்டாம் என்று ஆஸ்திரேலியா, தைவான், தென் கொரியா ஆகிய நாடுகள் எச்சரித்துள்ளன. அவற்றுடன் இப்போது அமெரிக்காவும் சேர்ந்து கொண்டிருக்கிறது.
இதனிடையே, சிங்கப்பூரில் ஸிக்கா நோயாளிகளில் மூன்று டஜன் பேர் முழுமையாகக் குணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.