தங்காப் எம்ஓ1 பேரணி தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக போலீசார் டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர் (எம்பி) தியோ கொக் செங்-கை அழைத்துள்ளனர்.
தியோ பேரணி ஏற்பாட்டாளர்களில் ஒருவர் அல்ல என்பதால் தன்னை போலீஸ் விசாரணைக்கு அழைக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை.
“நான் ஏற்பாட்டாளன் அல்ல. மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவே சென்றேன்.
“மஸ்ஜித் நெகராவில் ஒரு லாரி நிறுத்தப்பட்டிருந்தது. அதிலிருந்து பேசுமாறு என்னைக் கேட்டுக்கொண்டார்கள். அதற்காகத்தான் என்னை அழைத்திருக்கிறார்கள் போலும்”, என்று ராசா எம்பி கூறினார்.
தியோ, நாளை டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகம் சென்று வாக்குமூலம் அளிப்பார் எனத் தெரிகிறது.
அங்கு கூடியிருந்த 2000 பேர்களையும் போலீசார் விசாரணைக்கு அழைப்பார்களோ?. அப்படியானால் அந்த 2000 பேர்களில் நானும் ஒருவன். அரசாங்கத்தை ஏமாற்றி கோடிக்கணக்கான பணத்தை ஏப்பம் விட்டவர்களை பிடிக்கச் சொன்னால், பிடிக்கச் சொன்னவர்களுக்கு மருட்டலா? நமது போலீசார் அலிபாபாவும் நாற்பது திருடர்களை விட மோசமானவர்களாக இருப்பார்கள் போல் தோன்றுகிறது.