‘ஜனநாயகத்தைக் கீழறுக்க முயன்றதாக’ டிஏபி, பிகேஆர் பிரதிநிதிகள், மாணவர்கள் முதலியோரிடம் விசாரணை

rallyகடந்த  வார  இறுதியில்    நடைபெற்ற    தங்காப்  எம்ஓ1   பேரணி    தொடர்பில்     டிஏபி-இன்  ராசா  எம்பி    தியோ    கொக்   சியோங்,  பிகேஆரின்   ஸ்ரீசித்தியா  சட்டமன்ற  உறுப்பினர்   நிக்   நஸ்மி   நிக்   மாட்,     சில    மாணவர்கள்,   ஒரு   சமூக    ஆர்வலர்    ஆகியோரை   வாக்குமூலம்   பதிவு    செய்வதற்காக   போலீஸ்   அழைத்திருந்தது.

அவர்கள்  இன்று  காலை  மணி  11-க்கு   டாங்  வாங்கி     போலீஸ்  மாவட்டத்  தலைமயகம்  சென்றனர்.

2012  அமைதிப்  பேரணிச்   சட்டத்தையும்    1948ஆம்  ஆண்டு   தேச  நிந்தனைச்    சட்டத்தையும்  மீறியதற்காகவும்   “ஜனநாயகத்துக்கு  எதிராகக்  கீழறுப்புச்  செயலில்”  ஈடுபட்டதற்காகவும்   தங்கள்மீது    விசாரணை    நடப்பதாக    நிக்  நஸ்மி  குறிப்பிட்டார்.

“நேற்றுத்தான்   சுதந்திர  தினத்தைக்  கொண்டாடினோம்.  இப்போது  இப்படி   நடப்பது   வருந்தத்தக்கது.

“நாட்டை  அலைக்கழிக்கும்   ஊழல்களை  எதிர்த்து   நீதியை  நிலைநாட்டுவதற்காக       அளவற்ற   துணிச்சலுடன்   பேரணிக்கு  ஏற்பாடு  செய்தார்கள்   மாணவர்கள்.    அவர்களை   விசாரணைக்காக  இழுத்து    வந்திருக்கிறார்கள்  போலீசார்”,  என்றவர்  கூறினார்.

தியோ,  பேரணியில்   உரை  நிகழ்த்தியதை    ஒப்புக்கொண்டார்.  ஏற்பாட்டாளர்கள்   கேட்டுக்கொண்டதற்கிணங்க,    தனிப்பட்ட   முறையில்  தாம்  பேசியதாக   அவர்  கூறினார். ஏற்பாட்டாளர்களை    அதற்குமுன்   சந்தித்ததே  இல்லை    என்றும்    அவர்  சொன்னார்.

மாணவர்களில்   அனிஸ்    ஷியாபிக்  முகம்மட்  யூசுப்,    அக்குயிலா   சைனுசி,    அமிர்    அப்ட்  ஹாடி,    லுக்மான்   ஹக்கிம்,    சுஹாய்ல்   வான்   அஸகார்   ஆகியோரும்   சமூக   ஆர்வலர்   இஸயா  ஜேக்கப்பும்    விசாரணைக்கு    அழைக்கப்பட்டிருந்தனர்.