பிரேசில் அதிபர் ரூசெப் பதவிநீக்கம், டெமர் புதிய அதிபர்

brazilஊழல்களாலும்    பொருளாதார   நெருக்கடிகளாலும்     அலைக்கழிக்கப்பட்டு   வந்த    லத்தின்   அமெரிக்காவின்    மிகப்   பெரிய  நாடான   பிரேசிலில்  செனட்   அவை   அதிபர்   டில்மா   ரூசெப்பைப்   பதவிநீக்கம்   செய்தது.

ரூசெப்மீது  அடுக்கடுக்காகக்  கூறப்பட்டு  வந்த  ஊழல்  குற்றச்சாட்டுகளின்   அடிப்படையில்     செனட்டர்கள்   61க்கு  20  என்ற  வாக்குகளில்    அவரைப்  பதவியிலிருந்து  நீக்கினர்.

அவருக்குப்  பதிலாக   முன்னாள்    துணை  அதிபர்   மைக்கல்  டெமர்   தற்காலிக  அதிபராக  பொறுப்பேற்றார்.

சில  ஆண்டுகளுக்கு  முன்வரை   பிரேசிலின்  பொருளாதாரம்  படுவேக   வளர்ச்சியைக்  கண்டு  வந்தது.  உலக   அளவில்   அதன்  மதிப்பும்   உயர்ந்து   வந்தது.  அதன்பின்னர்   மிகப்  பெரிய  பொருளாதாரத்   தேக்கம்.  தேசிய   எண்ணெய்  நிறுவனம்  பெட்ரோபிராசில்     நிகழ்ந்த  ஊழல்கள்   ரூசெப்பின்  கூட்டாட்சியின்  பெயரை  கெடுத்தன.

பெட்ரோபிராசைத்   தொடர்ந்து    மற்ற  இடங்களிலும்  நிகழ்ந்த   ஊழல்கள்    கடந்த    இரண்டரை     ஆண்டுகளாக   பிரேசிலின்   அரசியலையும்   பொருளாதாரத்தையும்  கடுமையாக  பாதித்தன.  மில்லியன்   கணக்கான   மக்கள்   தெருவில்   இறங்கி   ரூசெப்    வெளியேற்றப்பட   வேண்டும்  என்று  கோரி   ஆர்ப்பாட்டம்   செய்தனர். அதன்  விளைவாக   ஆட்சிக்கு   வந்து   இரண்டாண்டுகள்கூட    ஆகவில்லை,  பிரேசிலின்  முதலாவது  பெண்   அதிபர்  பதவியிலிருந்து   வெளியேற்றப்பட்டார்.