ரபிசி: வருத்தமில்லை; சிறை செல்லவும் தயார்

rafiziபிகேஆர்   தலைமைச்   செயலாளர்   ரபிசி   ரம்லி   எதற்கும்  கலங்காதவர்.  அதிகாரத்துவ இரகசிய   சட்டத்தை  (ஓஎஸ்ஏ)  மீறியதாகக்  குற்றம்   சாட்டப்பட்டுள்ள   அவர்    சிறை  செல்லவும்    தயார்   என்கிறார்.

கோலாலும்பூர்  செஷன்ஸ்   நீதிமன்றம்       ரபிஸியை   அதிகாரத்துவ   இரகசிய   சட்டம்    1972-இன்கீழ்   அவர்மீது    சுமத்தப்பட்டுள்ள   குற்றச்சாட்டுக்கு   எதிராக    எதிர்வாதம்  செய்ய  உத்தரவிட்டிருக்கிறது.

இந்தத்  தீர்ப்பு  எதிர்பார்க்கப்பட்டதுதான்    என  ரபிசி  குறிப்பிட்டார்.  ஆனால்,  விசாரணையின்போது   அக்குற்றச்சாட்டில்   உள்ள  பலவீனங்களைத்    தம்   தரப்பு     வழக்குரைஞர்கள்   நிரூபிப்பார்கள்    என்றவர்  சொன்னார்.

வழக்கு  சில   மாதங்களில்   முடிந்து     தாம்   சிறைக்குக்கூட   அனுப்பப்படலாம்  என்றாரவர்.

“ஆனாலும்  வருத்தமில்லை.  என்  போக்கை  அல்லது  அணுகுமுறையை   மாற்றிக்கொள்ளப்   போவதில்லை.   ஏனென்றால்   ஒரு   தனிப்பட்ட    மனிதன்  என்ற  முறையில்   உண்மையை   எடுத்துரைப்பதே    என்  பொறுப்பு    என்று  நம்புகிறேன்.

“உண்மை  உரைப்பதன்  விளைவு    என்னவாக  வேண்டுமானாலும்  இருக்கட்டும்.  அல்லாவிடமே   விட்டு  விடுகிறேன்”,  என்று  ரபிசி  ஓர்    அறிக்கையில்   கூறினார்.

பாண்டான்  எம்பியுமான  ரபிசி,   மக்கள்    சம்பந்தப்பட்ட    விவகாரங்களில்   கருத்துரைக்காமல்  இருக்க  முடியாது  என்றார்.