போலீஸ் படைத் தலைவர்(ஐஜிபி) காலிட் அபு பக்கார் உண்மை புரியாமல் பேசுகிறார்.
அண்மையில் கோலாலும்பூரில் தமிழர் அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்துக் கருத்துரைத்த ஐஜிபி, அது தமிழீழ விடுதலைப் புலி(எல்டிடிஈ)களுக்கு ஆதரவளிப்போரால் ஏற்பாடு செய்யப்பட்டது என்று கூறியிருந்ததில் சிறிதும் உண்மையில்லை என பினாங்கின் இரண்டாம்நிலை துணை முதலமைச்சரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான பி.இராமசாமி கூறினார்.
அந்த அமைப்புகள், இலங்கையில் 2009-இல் முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போரின்போது பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் சாவுக்கும் ஆயிரக்கணக்கானோர் காணாமல்போனதற்கும், அவர்களில் பலர் சிறார்கள், தமிழ்ப் பெண்கள் ஈவிரக்கமின்றிப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதற்கும் காரணமான மகிந்தா ராஜபக்சே-இன் வருகைக்கு எதிர்ப்புக்குத் தெரிவிக்கத்தான் புத்ரா வாணிக மையத்தில் கூடினர்.
பல ஆண்டுகளுக்கு முன்பே எல்டிடிஈ-இன் கதை முடிந்து விட்டது. ஸ்ரீலங்கா தமிழர்களின் நினைவில் வேண்டுமானால் அது வாழ்ந்து கொண்டிருக்கலாம், ஆனால், அதை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது என்பதை அவர்கள் உணர்ந்தே உள்ளனர்.
அப்படி இருக்க, ஆர்ப்பாட்டக்காரர்கள் எல்டிடிஈ-க்கு ஆதரவு தெரிவிக்கத்தான் அங்கு கூடினார்கள் என்று நாட்டின் போலீஸ் படைத் தலைவர் எப்படிக் கூறலாயிற்று? அது முழுக்க முழுக்க தவறு என இராமசாமி ஓர் அறிக்கையில் கூறினார்.
போர் என்றால் இரு தரப்பிலும் உயிர்சேதம் தவிர்க்க முடியாதது என்பதை அறிந்தும் போரை மக்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து துவக்கி பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் சாவுக்கும் காரணமான தீவிரவாத அமைப்புகளுக்கு கண்டனம் தெரிவிக்காதவர்கள் ஒரு தரப்பினருக்கு மட்டும் எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஒரு சில அமைப்புகள் நடத்தியத்தை ஒட்டு மொத்த மலேசிய தமிழர்களும் ஆதரவளிக்கிறார்கள் என்ற தவறான தோற்றத்தை உண்டு பண்ணாதீங்க
நான் பலமுறை கூறியதுபோல நல்ல அறிவுள்ள, சிந்தனையுள்ள,படித்த,ஆங்கிலத்தில் புலமை பெற்ற, சலகமாக பேசக்கூடிய, மதம்,இனம் பார்க்காத, இலஞ்சம் வாங்காத, நேர்மையான போலீஸ்படை தலைவர் இருந்தால் மட்டுமே நாட்டில் சுபேஷம் காண வழிவகுக்கும் . இல்லையேல் நாடு பாதுகாப்பு இல்லா, சட்டம் இல்லாத நாடக அமைய வழி காணும் .
அட சிங்கள அரசுக்கு பல்லக்கு தூக்க கூட எங்களில் ஆட்கள் உண்டு …போர் என்பது சில சர்வதேச சட்ட்ங்களுக்கு அமைய நடத்துவது மக்களால் தெரிவு செயப்படட அரசின் கடமை ..சொந்த மக்களை கண் மூடித்தனமாக தாக்குவது அல்ல ..போராளிகள் சர்வதேச சட்டங்களை மதிக்கலாம் என்று எதிர்பார்க்கமுடியாது ..அவர்கள் பயங்கர -வாத முத்திரை குத்தப்பட்டவர்கள் ..சர்வதேச அரசுகளினால் ..சுபாஷ் சந்திரா போஸை பிரிட்டிஷ் அரசாங்கம் பயங்கர வாதி என்றது ..அனால் இந்தியாவில் இவரை தலையில் வைத்து ஆடுகின்றார்
கொடுங்கோலன் சர்வாதிகாரி ராஜபக்சே வரவை எதிர்த்து தானே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதைக்கூட புரிந்துகொள்ள முடியவில்லை இந்த அரசுக்கு.இவன் வருகை மறைத்து விடுதலை புலிகள் ஆதரவு என்று திசை திருப்புவது வேடிக்கையிலும் ஒன்று.இந்த கொடுங்கோலன் வரவை எதிர்த்து நாடு முழுவதும் காவல் துறையில் புகார் அளித்தும் இவன் வருகைக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. அணைத்து புகாருக்கு மதிப்பும் இல்லை.
ஆர்ப்பாடுடம் செய்வதற்கு தமிழர்களுக்கு உரிமை உண்டு . ஆனால் தூதரை தாக்கியது கண்டிக்க உரியது மற்றும் கண்டனத்துக்கு உரியது . மன்னிக்க முடியாத குற்றம் . இன்று மலேஷியா உலக அரங்கில் தலை குனிந்து நிட்கிறது மலேஷியா தமிழர்களால்
கபாலினாய்டு தெலுங்கனாச்சே . எப்படி தமிழனாக அடையாளப்படுத்தி தமிழ் இனத்துக்குள் புல்லுருவியாக வேலைசெய்கிறான் !
ஒருநாட்டின் தூதரை தாக்கியது கண்டிக்கத்தக்கது ..
இலங்கையிலும் இந்தியாவிலும் வடுகர்கள் தமிழ் இனத்துக்குச்செய்யும் இரண்டகத்துக்கு ஒருநாள் மிகப்பெரிய விலை கொடுப்பார்கள் ..
தமிழன் தவறு செய்தாலும் தவறே ஒழிய சரியாகாது. செத்த பாம்பை கண்டு மலேஷியா தமிழன் ஏன் ஆர்பரிக்கிறான் என்று புரிய வில்லை.
சிங்கள அரசுக்கு பல்லக்கு தூக்க கூட எங்களில் ஆட்கள் உண்டு… என்பதைவிட இலங்கையில் தமிழர்கள் பெருபான்மையாக அதிகாரத்தில் இருந்து சிங்களவர்கள் சிறுபான்மையராக ஆயுதம் ஏந்தி பெருபான்மையினர் மீது தாக்குதல் நடத்தி இருந்தால் தமிழர்களும் சிங்களவர்கள் கடைபிடித்த பாணியைத்தான் பின்பற்றி இருப்பீங்க இப்படித்தான் சொந்த அறிவு இல்லாமல் சொல்புத்தி கேட்டு எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஆயுதம் ஏந்தி இலங்கை தமிழர்களை பலிக்கடாவாக்கி விட்டு இப்போது ஒப்பாரி வைச்சு என்ன பயன்
பிஜி தீவில் இந்தியர்கள் சிறுபான்மையினராக அதிகாரத்தில் இருந்தபோது ஆட்சி கவிழ்ப்பு புரட்சி ஏற்பட்டபோது உங்களைப்போல் அறிவுகெட்ட தனமாக ஆயுதம் ஏந்தாமல் மக்கள் நலன் கருதி செயல்பட்டதை பார்த்தாவது திருந்துகடா
தன்மானமுள்ள தமிழனும்,நல்ல தமிழச்சிக்குப் பிறந்த தமிழனும் அந்த ‘தாக்குதலை ‘ கண்டிக்கமாடடான்.மற்ற இனத்தில் இன ஒழிப்பு நடந்திருந்தால் நடப்பதே வேறு.தமிழன்தான் அடக்கி வாசிக்கிறான்.இங்கு சில தருதலைகளின் கருத்துக்களை படிக்கும் போது நம்மில் சிலருக்கு சுட்டுப் போடடாலும் இன உணர்வும் மொழி உணர்வும் வராது போல் தெரிகிறது.பாலஸ்தீனர்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலிய அதிபரோஅல்லது அந்நாட்டு அமைச்சர்களையோ மலேசியா அரசாங்கம் இங்கு வர அனுமதி கொடுக்குமா?.அல்லது சிகப்பு கம்பளம்தான் விரிக்குமா? ஏன் தமிழனுக்கு மட்டும் இந்த பாகுபாடு? இதனை எதிர்த்து குரல் கொடுத்த மலேசியா தமிழர்களின் நீதி ஏன் நசுக்கப் பட்ட்து? நாமும்தான் இந்த நாட்டின் பிரஜைகள்.நாமும்தான் இந்த நாட்டுக்கு வரி செலுத்துகிறோம். ஆகவேதான் நமது கோரிக்கைகளும் அங்கீகரிக்கப் பட வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம்.அப்படி நமது கோரிக்கைகள் அங்கீகரிக்கப் பட்டிருந்தால் நிலைமை இந்த அளவுக்கு எல்லை மீறியிருக்காது.மலேசியா பிரஜைகளான நம்மவர்களின் உணர்ச்சிகளுக்கும் மலேசியா அரசாங்கம் இடமளித்திருக்க வேண்டும்.இன பேதம் சிக்கலைதான் உண்டுபண்ணும்.
அன்று நாங்க ஜெயவர்த்தனா ஆட்களாக்கும் நாங்க தமிழர்கள் அல்ல நாங்க யாழ்பாணமாக்கும் என்று இந்நாட்டில் கூறியதும் இல்லாமல் தமிழர்களை கேவலமாக எள்ளி நகையாடிய யாழ்ப்பாணத்தானை தமிழன் என்று இன்று ஏற்று கொள்ளும் தமிழன் தன்மானமுள்ள தமிழனாகவோ ,நல்ல தமிழச்சிக்குப் பிறந்தவனாகவோ இருக்க முடியாது.
(பிஜி தீவில் இந்தியர்கள் சிறுபான்மையினராக) 52 சதவீதம் இந்தியர்கள் இருக்கும்போதுதான் அங்கே ஒரு இந்தியன் பிரதமராக வந்தார். வர முடிந்தது . அப்பொழுது பிஜி தளபதி மக்கள் ஆட்சியை கவிழ்த்து ராணுவ ஆட்சியை கொண்டு வந்தார். அப்போதும் அந்த ராணுவம் இந்தியர்களை கற்பழித்து கொலை செய்யவில்லை. ஆதி முதற் கொண்டே ஈழ தமிழனை கொன்றே தீர்ப்பது என்பது கொளகையாய் வைத்து இருந்தது சிங்கள ராணுவம் பிஜி நாடடையும் ஸ்ரீலங்காவியும் ஒப்பிட்டு பேசுவது மொடடை தலைக்கும் முட்டி காலுக்கும் ஒப்பிட்டு பேசுவது போல இருக்கு. இனிமே அமைதியா இருக்க முடியாது என்று எண்ணி திருப்பி அடித்தான் .அங்குள்ள வீர தமிழன். கபாலத்தில் எதாவது இருந்தா சரித்திரம் தெரிந்து பேசணும்.. நாங்க ஜெயவர்த்தனா ஆட்களாக்கும் நாங்க தமிழர்கள் அல்ல என்று எவனும் சொல்ல வில்லை அது திருட்டு திராவிடன் கட்டி விடட கதை . எந்த தமிழனாவது நல்லது செய்தால் அவனை எதாவது குறை சொல்லி மாட்டம் தட்டுவதே .திரவிடனுக்கு (அதிலும் தெலுங்கன்) பொழப்பா போச்சு. தமிழனை தமிழன் தான் ஏற்று கொள்வான் .தெலுங்கன் ஏற்று கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
திருட்டு திராவிட மன்னா செத்த பாம்புனு மலேஷியா தமிழனை மட்டம் தட்டு முன்னே நீ ஏர்போர்ட் வந்து சொல்லி இருக்கணும். யார் செத்த பாம்புனு தெரிந்த இருக்கும். இல்லையென்றால் உதை வாங்கியவனிடம் .கேட்டு தெரிந்து இருக்கணும் . உனக்கு தாய் மொழி தெலுங்கு. தெலுங்கு பாசத்தை தெலுங்கனிடமே வைத்து கொள்
சின்ன ….. உன் மூதாதையர்களிடம் போய் கேளு யாழ்ப்பாணத்தான் பரியாரிகூட இந்த நாட்டுலே தமிழனை எவ்வளவு கேவலமா பேசினான்னு தெரியும் இன்னைக்கு எந்த யாழ்ப்பாணத்தான் தன்னை தமிழனுன்னு சொல்றான் உங்களை மாதிரி ….. தமிழன்கள்தான் யாழ்ப்பாணத்தானை தமிழன்னு தலையிலே தூக்கி வைச்சுக்கிட்டு தாங்குறீங்க
க …….லி . என்ன மாதிரி தமிழன் தமிழர்களை பற்றி தெரிந்து கொள்ளுவான். அதை தெலுங்கன் சொல்லி தெரிய வேண்டியதில்லை. தமிழன்தான் தமிழன்னு தலையிலே தூக்கி வைச்சுக்கிட்டு தாங்குவோம். இதுவரை உன்னை மாதிரி தெலுங்கனை தூக்கி வெச்சுக்கிட்டு எங்களை கீழே மிதித்தது போதும்..உன் மூதாதையர்களிடம் போய் கன்னட ரஜினிகாந்திடம் விசுவாசமாய் இருப்பது எப்படி தமிழனை எப்படி மட்டம் தடடாளாம் என்று தெரிந்து கொள்
மலேசியாவில் வாழும் யாழ்பாணத்தவரின் குணாதிசயங்கள் வேறு.ஈழத்தில் வாழும் யாழ்ப்பாணத்தவரின் குணாதிசயங்கள் வேறு.இந்த இரு நாட்டு தமிழர்களையும் சேர்த்து வைத்து முடிச்சி போடுவது முடடாள்தனமானது.இன-மொழியுணர்வில் ஈழத்து தமிழர்களுக்கு ஈடு அவர்கள்தான்.இங்குள்ளவர்கள் அந்த விஷயத்தில் கொஞ்சம் கம்மி.உலகில் தமிழினம் ஓன்று உண்டு.அந்த இனம் மானம்,வீரம்,ரோஷம் உள்ள இனம் என்று உயிரை பணயம் உலகத்துக்கு எடுத்துக் காட்டியவர்கள் இந்த ஈழத்து தமிழர்கள்தான்.இதனால் சரித்திரம் தெரியாமல் ஈழத்து தமிழர்களை மட்டம் தட்டும் சில ஈன தமிழர்களும் பெருமையடைகிறார்கள்.
மலேசியாவில் வாழும் தமிழர்கள் வாழ்க்கைமுறை எண்ணங்கள் வேறு தமிழ் நாட்டில் வாழும் தமிழர்கள் வாழ்க்கைமுறை எண்ணங்கள் வேறு இனம்தான் தமிழர்கள் ஆனால் அவரவர் நாட்டுக்கு ஏற்ப அவர்களுடைய குணாதிசயங்கள் மாறுபடுகின்றன மலேசியாவில் வாழும் தமிழர்களின் எண்ணங்களைப்போலவே தமிழ் நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் முடடாள்தனமானதுதான். அதேபோல் தமிழ் நாட்டு தமிழர்களை மட்டம் தட்டி பெருமைபட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் சில ஈன தமிழர்கள் நமது நாட்டிலும் உண்டு.