பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, ஜன்ம பகைவர்களாக விளங்கிய டாக்டர் மகாதிர் முகம்மட்டும் அன்வார் இப்ராகிமும் சந்தித்துக் கொண்டது 14வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள நல்லதொரு தொடக்கம் என வருணித்துள்ளார்.
அச்சந்திப்பு 14வது பொதுத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் மக்களை ஒன்றுபடுத்தவும் கட்சிகளை வலுப்படுத்தவும் உதவும் என்றவர் நம்புகிறார்.
மகாதிர் நேற்று 2016 தேசிய பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிராக அன்வார் இப்ராகிம் தொடுத்துள்ள வழக்குக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக கேஎல் உயர் நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்தது பற்றிக் கருத்துரைத்தபோது அஸ்மின் இவ்வாறு கூறினார்.
அவ்விருவரும் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்றுத்தான் முதல்முறையாக நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டார்கள்.
எதிரிக்கு எதிரி நண்பர்களாவது காலத்தின் கட்டாயம் என இருவருமே ஆக்கபூர்வமாக செயல்பட்டால் 14வது பொது தேர்தலில் மாற்றத்தை கொண்டு வரலாம். ஆனால் இருவருமே அம்னோ மனப்பான்மை கொண்டிருப்பதனால் எவ்வளவு நாள் நீடிக்கும் என்பதுதான் கேள்வி.
அன்வாரை வீழ்த்துவதில் மகாதீர் ஜெண்டல்மேன் போல் நடந்து கொள்ளவில்லை என்ற கோபம் எனக்கு இன்னும் மாகாதீர் மேல் இருக்கிறது. ஆனால் அன்வார் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை என்பது வியப்பாக உள்ளது எனக்கு.
அரசியலில் எதிரி நண்பன் ஆவதும் ! ,நண்பன் எதிரி ஆவதும் சகஜம் என்பதை முன்னாள் தலைவர்கள் இருவரும் நிரூபித்து இருக்கிறார்கள் ! சந்தர்ப்ப வாதம் தலைவிரித்து ஆடுகிறது ! தனக்கு சாதகமாக எதுவும் நடக்க வேண்டும் என்றால் யார் காலிலும் விழலாம் என்பதை நி ருப்பித்திருக்கிறார்கள் மாபெரும் தலைவர்கள் இருவரும் ! லஞ்சத்தை ஒழிப்பேன் ! தேசத்தை காப்பேன் என்றெல்லாம் சூழ் உரைத்த மகா தீரர் ! 22 ஆண்டுகள் தேசத்தை வழி நடத்திய மாபெரும் தலைவர் ! தானே சிறையில் தள்ளிய ஒருவரை ஏன் காண வேண்டும் ! அப்படியென்றால் அவரின் குற்ற சாட்டு பொய்யானதா !!
ஹிண்ட்ராப் செய்தால் துரோகம் அன்வர் செய்தால் காலத்தின் கட்டாயம்…