ஞாயிற்றுக்கிழமை கேஎல் அனைத்துலக விமான நிலையத்தில், ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரால் ஸ்ரீலங்கா தூதர் இப்ராகிம் அன்சார் தாக்கப்பட்டதற்கு மலேசிய அரசாங்கம் வருத்தம் தெரிவித்தது.
அத்தாக்குதலில் தூதருக்குச் சொற்ப காயங்கள் ஏற்பட்டதாக வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கை கூறிற்று.
“மலேசிய அரசாங்கம் மேதகு தூதர் இப்ராகிம் அன்சாரிடம் வருத்தம் தெரிவிக்கிறது. மலேசிய அதிகாரிகள் நடந்த சம்பவத்தை விசாரித்து அதற்குப் பொறுப்பானவர்களை நீதிமன்றத்தில் நிறுத்துவார்கள்”, என அவ்வறிக்கை கூறியது.
இன்று மலேஷியா உலக அரங்கில் தலை குனிந்து நிட்கிறது
சில சமயங்களில் நம்மவர்கள் சிலருக்கு உணர்ச்சி மேலோங்கும்
பொழுது அறிவு மங்கி விடுகிறது ! தூதரை தாக்கியது அநாகரீகமான
செயல். அதற்கு பதில் ராஜபக்சே மீது செருப்பை வீசி இருக்கல்லாம் ! அனைவரும் மகிழ்ச்சி அடைந்திருப்போம்.
மற்ற நிகழ்வுகளில் மலேஷியா தலை நிமிர்ந்து நிற்கின்றதா?
மாதர்களைத் தாக்கி குழந்தைகளைக் குத்தி கொலை செய்யும் ஸ்ரீலங்கா அரசின் தூதரைத் தாக்குவதில் என்ன குறை?
இந்த இப்ராஹிம் அன்சார் தமிழனா?