திரெங்கானு மசீச, அம்மாநிலத்தில் பாஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபோது கோலா திரெங்கானுவில் ஆமைச் சின்னத்தை உடைத்தெறிந்ததுபோல் லங்காவியின் அடையாளச் சின்னமான கழுகுச் சிலையும் உடைபடுவதற்கு இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தியது.
“1999-இல் பாஸ் திரெங்கானுவில் ஆட்சிக்கு வந்தபோது, அப்போது பாஸ் மந்திரி புசார் அப்துல் ஹாடி ஆவாங் தலைமையில் செயல்பட்ட மாநில அரசு செய்த பிற்போக்குத்தனமான முதல் வேலை, கோலா திரெங்கானு சாலைச் சுற்றுவட்டத்தில் இருந்த ஆமைச் சிலையை உடைத்தெறிந்ததுதான். அது இருந்தது சிலை வணக்கத்துக்கு ஒப்பாகும் என்று கூறியது”, என்று திரெங்கானு மசீச தலைவர் தோ சின் யாவ் குறிப்பிட்டார்.
ஆமை என்றால் திரெங்கானு நினைவுக்கு வருவதுபோல் கழுகு என்றால் லங்காவிதான் நினைவுக்கு வரும் என்றாரவர்.
லங்காவியின் அடையாளச் சின்னமாகவுள்ள கழுகுச் சிலையை உடைத்தெறிய வேண்டிய அவசியமில்லை. என்று கூறிய அவர், அதை உடைப்பது ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் பல நூற்றாண்டுகள் பழமையான புத்தர் சிலைகளை வெடிவைத்துத் தகர்த்த சம்பவத்துக்கு ஒப்பாகும் என்றார்.
அது ஒரு புறம் இருக்கட்டும் . பினாங்கில் எப்போ தமிழர்களை முதல் அமைச்சர் ஆக்க போகிறீர்கள்
MALAYAN !
பினாங்கில் எப்போது தமிழர்களை முதல் அமைச்சர் ஆக்க போகிறீர்கள் என்று கேட்பதற்கு பதிலாக மலேசியாவில் எந்த மாநிலத்தில் முதல் முறையாக BANGLAPUTRA-வை முதலமைச்சராக்க போகிறீர்கள் என்று கேட்டிருந்தால் ஒருவேளை இந்நேரம் பதில் கிடைத்திருக்கும்.