பிகேஅர் உறுப்பினர்கள் டாக்டர் மகாதிர் முகம்மட்- அன்வார் இப்ராகிம் சந்திப்பால் அதிருப்தி அடைந்து கட்சியிலிருந்து வெளியேறுவார்கள் என்கிறார் உள்துறை துணை அமைச்சர் நூர் ஜஸ்லான் முகம்மட்.
“மகாதிர் அன்வாரைச் சந்தித்தார். எதற்கு? அவர் பிகேஆரின் ஆதரவை நாடுகிறார். ஆனால் அவர், 20 ஆண்டுகளுக்குமுன் அன்வாருக்குக் கெடுதல் செய்ததால்தான் பலர் அம்னோவிலிருந்து பிகேஆரில் சேர்ந்தார்கள் என்பதை மறந்து விட்டார்”, என புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் நூர் ஜஸ்லான் தெரிவித்தார்.
“எனவே, இப்போது அவர் அன்வாரைச் சந்தித்தது பிகேஆர் உறுப்பினர்கள் பலருக்குப் பிடிக்காது.
“அது அடுத்த பொதுத் தேர்தலுக்க்கு அம்னோ- பிஎன்னுக்குத்தான் நன்மையாக அமையும். ஏனென்றால் அதிருப்தி அடைந்த பிகேஆர் உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து வெளியேறக்கூடும்”, என்றாரவர்.
மகாதிர்- அன்வார் சந்திப்பால் பிகேஅர் உறுப்பினர்கள் அதிருப்தி அடைகின்றனரா அல்லது அம்னோவில் உள்ள மகாதிர்- அன்வார் ஆதரவாளர்கள புது கூட்டணிக்கு தாவ போகிறார்களா என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.
அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி …..