பிகேஆர்- முன்னாள் படைவீரர் கலந்துரையாடலை போலீஸ் தடுப்பதாக ரபிசி முறையீடு

rafஇன்றிரவு    கோலாலும்புரில்    பணி ஓய்வு  பெற்ற   முன்னாள்   படைவீரர்களுடன்   நடைபெறவிருந்த  கலந்துரையாடலுக்கு   போலீஸ்    தடை  விதித்திருப்பதாக  பிகேஆர்    உதவித்   தலைவர்  ரபிசி  ரம்லி   கூறினார்.

அனாலும்   அந்த   சித்தியாவங்சா   கூட்டம்    தடையை   மீறி   நடைபெறும்   என்று  கூறிய  ரபிசி,    முன்னாள்   படைவீரர்கள்    அதில்  கலந்துகொள்ள   வேண்டும்    என்று   கேட்டுக்கொண்டார்.
பிகேஆர்,  முன்னாள்   படைவீரர்கள்   அதிகம்   வசிக்கும்   நாடாளுமன்றத்   தொகுதிகளில்   ‘Dialog Perajurit’  என்னும்   கலந்துரையாடலைத்   தொடர்ந்து   நடத்தும்    திட்டத்தைத்    தொடங்கியுள்ளது.  முதலாவது  கலந்துரையாடலை    இன்று  நடத்தத்   திட்டமிடப்பட்டிருந்தது.

அக்கலந்துரையாடல்     அமைதிப்பேரணிச்   சட்டத்தை    மீறுவதாக   போலீஸ்  கூறியுள்ளது. ஆனால்,     சட்டப்படி   10  நாள்களுக்கு  முன்னதாகவே   நிகழ்வு  பற்றித்   தெரியப்படுத்தி  விட்டதாக   ரபிசி     சொன்னார்.

“எனவே,  நான்  கலந்துரையாடலை    நடத்தப்  போகிறேன்.   மற்ற  மாநிலங்களில்  உள்ள  பணி  ஓய்வுபெற்ற    படைவீரர்களும்   அதில்  கலந்துகொள்வதை  உறுதிப்படுத்தியுள்ளனர்”,  என்றாரவர்.

கலந்துரையாடலைத்   தடுக்கும்   நடவடிக்கை   அடுத்த    பொதுத்   தேர்தலில்     மலாய்காரர்      வாக்குகள்     குறித்து    பிரதமர்  நஜிப்   அப்துல்   ரசாக்கின்   அரசாங்கம்   கவலைப்படுவதை     உறுதிப்படுத்துகிறது     என   ரபிசி   கூறினார்.