பிகேஆர் இளைஞர்கள்: ‘வரலாற்றுச் சிறப்புமிக்கக் கைகுலுக்கு’ ஒற்றுமைக்கு வழிகோலட்டும்

pkrபிகேஆர்    நடப்பில்  தலைவர்  அன்வார்   இப்ராகிமும்    முன்னாள்   பிரதமர்  டாக்டர்   மகாதிர்  முகம்மட்டும்    கைகுலுக்கிக்  கொண்ட  வரலாற்றுச்   சிறப்புமிக்க   நிகழ்வு   கட்சியில்   ஒற்றுமைக்கு    வழிவகுக்க  வேண்டும்,    அதனால்  ஒற்றுமையின்மை    ஏற்பட்டு  விடக்   கூடாது    என்பதே  பிகேஆர்   இளைஞர்களின்   விருப்பமாகும்.

இதனைத்   தெரிவித்த   கட்சியின்   இளைஞர்   துணைத்   தலைவர்    டாக்டர்   அபிப்   பஹார்டின்  18  ஆண்டுக்காலம்   பரம  வைரிகளாக  இருந்தவர்கள்   கைகுலுக்கியதைக்  கண்டு   அம்னோ   தலைவர்கள்   ஆடிப்  போயிருப்பதாகக்  கூறினார்.

“குறிப்பிடத்தக்க  ஒரு  நிகழ்வு   அது.  அதைக்  கண்டு    அம்னோ  தலைவர்கள்  கலங்கிப்  போயிருக்கிறார்கள்.   அவர்களுக்கு   என்ன  செய்வதென்று    தெரியவில்லை.    ஏனென்றால்,  செப்டம்பர்  5ஆம்  நாள்  நிகழ்வுக்கு இணையான  வேறொரு  நிகழ்வைக்  காண்பது   அரிது”,  என   அபிபி   மலேசியாகினியிடம்   தெரிவித்தார்.

“எல்லாம்   நல்லபடி    நடந்தால்   அம்னோவின்   அழிவைத்    தவிர்க்க  முடியாது”,  என்றாரவர்.

உள்துறை  துணை    அமைச்சர்    நூர்  ஜஸ்லான்    முகம்மட்,   மகாதிருக்கும்  அன்வார்  இப்ராகிமுக்குமிடையில்   நிகழ்ந்த   ‘வரலாற்றுச்  சிறப்புமிக்க’   சந்திப்பு    பிகேஆர்   உறுப்பினர்களிடையே   அதிருப்தியை   ஏற்படுத்தலாம்  என்றும்  அதிருப்தி   அடைந்த   உறுப்பினர்கள்     அக்கட்சியிலிருந்து  வெளியேறலாம்  என்றும்  கூறியிருந்தது   பற்றிக்  கருத்துரைத்தபோது   பினாங்கு   ஆட்சிமன்ற   உறுப்பினர்    இவ்வாறு   கூறினார்.