சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்) பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அப்புதிய கட்சி “பிபிபிஎம்” என்று விளங்கும் எனத் துணைப் பிரதமர் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
“பிபிபிஎம்- முக்குக் கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ ஒப்புதலைப் பெற அது அதன் அவைத்தலவர், கட்சித் தலைவர் ஆகியோரின் பொறுப்புகளை விளக்க வேண்டும்”, என அவர் கூறியதாக நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் ஆன்லைன் தெரிவித்தது.
கட்சியைப் பதிவு செய்வதற்கான மனுவை இடைக்காலத் தலைவர் முகைதின் யாசின் ஆகஸ்ட் 9இல் ஆர்ஓஎஸ்-ஸிடம் தாக்கல் செய்தார்.