சோதனைச் சாவடிகள் வழியாக சுடும் ஆயுதங்கள் கடத்தப்பட்டனவா? மறுக்கிறது சுங்கத் துறை

firearmவடக்கு   மாநில   எல்லையோரமாக   உள்ள   சோதனைச்   சாவடிகள் வழியாக   தாய்லாந்திலிருந்து    சட்டவிரோதமாக     சுடும்  அயுதங்களைக்  கடத்துவது    நடவாத   காரியம்   என்கிறது  சுங்கத்   துறை.

இரண்டு   நாடுகளுக்குமிடையிலான    எல்லையோரமாக  பாதுகாக்கப்படாத  பகுதிகள்  சில   உள்ளன.   அவற்றின்   ஊடாக    அவை  கடத்தப்படும்   சாத்தியம்  உண்டு   எனச்    சுங்கத்  துறை   தலைமை    இயக்குனர்   கஜாலி   அஹ்மட்   கூறியதாக    அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாச்   சோதனைச்  சாவடிகளிலும்  சுடும்  ஆயுதங்களைக்  கண்டுபிடிக்கும்  ஸ்கேன்னர்கள்   உள்ளன.  சுங்கத்  துறை     அதிகாரிகளும்  கடத்தல்காரர்களை  அடையாளம்  காணும்  பயிற்சி   பெற்றவர்கள்  என்றவர்    சொன்னார்.

கடத்தல்காரர்கள்  தாய்லாந்திலிருந்து   மலேசியாவுக்குள்   நுழைவதற்கு   கிளந்தானின்  சுங்கை  கோலோக்கைப்   பயன்படுத்திக்  கொள்கிறார்கள்  என்றும்   அவர்  சொன்னார். அந்த  ஆறு  இந்த   வெய்யில்  காலத்தில்     வறண்டு  போய்க்  கிடக்கிறது.

“எல்லையோரங்களில்  வசிப்பவர்கள்    கடத்தல்  நடவடிக்கை   பற்றித்   தெரிய   வந்தால்    எங்கள்   அதிகாரிகளிடம்   தெரிவிக்க   வேண்டும்”,  என  கஜாலி   கேட்டுக்கொண்டதாக   த   ஸ்டார்   தெரிவித்தது.