‘அம்னோ, சிறுபான்மை மக்களை வைத்து பூச்சாண்டி காண்பிக்கும் வேலையைக் கைவிட வேண்டும்’

mcaடாக்டர்  மகாதிர்  அவரது   அரசியல்    சாணக்கியத்  திறனை   மாற்றிக்  கொண்டிருப்பதுபோல்    அம்னோவும்    தன்னை   மாற்றிக்கொள்ள    வேண்டும்    என    மசீச   தலைவர்  ஒருவர்    வலியுறுத்தியுள்ளார்.

“மகாதிர்  அரசியல்  சாணக்கியத்துடன்  அன்வார்  இப்ராகிமை   மீண்டும்  அரவணைத்து   கொள்கிறார்   என்கிறபோது    அம்னோ  ஏன்   தன்னை  மாற்றிக்கொள்ளக்   கூடாது?”,  என   மசீச   மத்திய  செயல்குழு   உறுப்பினர்    டி   லியான்   கெர்  வினவினார்.

அம்னோ,   மலாய்க்காரர்களை,  முஸ்லிம்களை   ஒன்றுபட     வைப்பதற்கு  சிறுபான்மை  மக்களை  வைத்து    பூச்சாண்டி   காட்டிய    காலம்   மலையேறி  விட்டது    என்றாரவர்.

மசீச   சமய  நல்லிணக்கப்   பிரிவின்   தலைவருமான   டி,  “சீனர்கள்  வருகிறார்கள்;   மலாய்க்காரர்கள்   முற்றுகைக்கு   ஆளாகியுள்ளனர்;  இஸ்லாத்துக்கு  அச்சுருத்தல்”   என்பன   போன்ற     மிரட்டல்- உத்தி    இனியும்  எடுபடாது  என்றார்.

மேலும்,   மலாய்க்காரர்களை  ஒன்றுபடுத்துவதற்காக   அம்னோ  பயன்படுத்திய   இந்த  அரசியல்    தந்திரம்   அதற்கு  எதிராக   வேலை   செய்து   கிறிஸ்துவர்களையும்   இந்தியர்களையும்    சீனர்களையும்   ஒன்றிணைத்து   அவர்களிடையே  “அம்னோ- எதிர்ப்பு”  நிலைப்பாட்டை  உருவாக்கி  விட்டது.

எனவே,  அம்னோ  “பழைய  வியூகங்களை”க்  கைவிடுவது   நல்லது     என்றாரவர்.