நூல் வெளியீட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஒருவர், மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த்தின் 12-நாள் தடுப்புக் காவலில் இருந்த பின்னர் இன்று விடுவிக்கப்பட்டார்.
தடுப்புக்காவலை நீட்டிக்குமாறு எம்ஏசிசி கேட்டுக்கொள்ளாததால் மெஜிஸ்திரேட் நிக் இஸ்ஃபானி தஸ்னிம் வான் அப்துல் ரஹ்மான் அந்த 40-வயது ஆடவரை விடுவித்தார்.
ரிம15 மில்லியன் நூல் வெளியிடும் திட்டத்தில் நிகழ்ந்த மோசடி தொடர்பில் அவரைத் தடுத்து வைத்து எம்ஏசிசி விசாரணை செய்து வந்தது.
எம்ஏசிசி-இன் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார்.