தேர்தல் ஆணையம் தேர்தல் தொகுதிகளைத் திருத்தி அமைப்பது தமக்குச் சாதகமாக அமையும் என்றாலும் பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி அதை விரும்பவில்லை.
அப்படித் திருத்தி அமைக்கப்படும் வேளையில் புவாவின் தொகுதி டமான்சாரா எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டு அதன் வாக்காளர் எண்ணிக்கையும் இப்போதைய 85, 401-இலிருந்து 150,439 ஆக அதிகரிக்கும். நாட்டின் மிகப் பெரிய தொகுதியாக அது விளங்கும்.
அதனால் தமது பெரும்பான்மை 44,672-இலிருந்து 61,872 ஆக கூடலாம் என்றும் புவா ஆருடம் கூறுகிறார்.
ஆனால், தமது தொகுதியில் வாக்காளர் எண்ணிக்கை கூடும் வேளையில் காப்பார் தொகுதியில் 144,159 ஆக வாக்காளர் எண்ணிக்கை 100,456 ஆகக் குறையும் என்றாரவர்.
“அப்படி நடந்தால் இப்போது பிகேஆரின் ஜி.மணிவண்ணன் வசமுள்ள காப்பாரைக் காப்பாற்ற முடியாமல் போகலாம்.
“உத்தேச தொகுதி திருத்தத்தால் அவருடைய பெரும்பான்மை(2013-இல் 23,790 வாக்குகள் பெரும்பான்மை) பாதியாகக் குறையும்”, என்றாரவர்.
எதிரணிக்கு அதிகப் பெரும்பான்மையுள்ள தொகுதிகளில் பெரும்பான்மையைக் கூட்டுவதும் அதே நேரத்தில் எந்தெந்த தொகுதிகளை பிஎன் திரும்பக் கைப்பற்ற வாய்ப்பிருக்கிறதோ அங்கு பெரும்பான்மையைக் குறைப்பதும்தான் இசி தொகுதிகளைத் திருத்தி அமைப்பதன் நோக்கமாகும் என புவா கூறினார்.