சிறார்களை ஒருதலைப்பட்சமாக மதமாற்றுவதால் எழும் விவகாரங்களுக்குத் தீர்வு காண்பதற்காக சட்டச் சீரமைப்பு (திருமணம், மணவிலக்கு)ச் சட்டம் 1976-க்குக் கொண்டுவரப்படும் திருத்தங்களால் ஆகப் போவது எதுவுமில்லை என்கிறார் கெராக்கான் இளைஞர் பிரிவுத் துணைத் தலைவர் எண்டி யோங்.
“கவனமாக ஆராய்ந்து பார்த்ததில் சட்டமுன்வரைவை மேலும் சீரமைக்க வேண்டும் என்ற முடிவுக்குத்தான் வந்தோம்”, என்றாரவர்.
சட்டவரைவு மிக விரிவானதுதான். ஆனாலும் அது சிறார் ஒருதலைப்பட்சமாக மதமாற்றம் செய்யப்படுவதைத் தடுக்கவில்லை என்றவர் குறிப்பிட்டார்.
“நாங்கள் உள்துறை அமைச்சைச் சந்தித்து எங்கள் கருத்துகளையும் பரிந்துரைகளையும் முன்வைப்போம்”, என வழக்குரைஞருமான யோங் ஓர் அறிக்கையில் கூறினார்.
நடக்கும் ஆனால் நடக்காது.
கெராக்கான் இளைஞர் பிரிவு தலைவர் குறிப்பிட்டது போல் மதமாற்று சட்ட வரைவு சரிபட்டு வராது போல்தான் தெரிகிற்து. அவர் கூறுவது போல சட்டத்துறை அமைச்ச்ரை சந்திப்பது தான் நல்லது.
எந்தச் சட்டத்தை நீங்கள் கொண்டுவந்தாலும் “ஜாக்கிம்” அதனை ஏற்றுக்கொள்ளாது! அவர்கள் சட்டத்தை மீறுவார்கள்! அவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள்! அவர்களை அடக்கி வைக்க எந்த அரசாங்கத்தாலும் முடியாது!
இவர்கள் இப்படி சொல்கிறார்கள்.ஆனால்,நமது இந்திய பிரதிநிதிகளோ ” ஆகா, பிரமாதம்.வரவேட்கிறோம்.” என்று முந்திரிகொடடை மாதிரி முந்திக்கொள்கிறார்களே.அவர்கள் படித்துவிட்டு கருத்தை சொல்கிறார்கள்.இவர்கள் படிக்காமலே அவசரகதியில் கருத்தை சொல்கிறார்கள்.இதில் யார் மடையர்கள் என்பதை மக்களே முடிவு செய்யட்டும்.
நடக்கும் என்பார் நடக்காது …. நடக்காது என்பார் நடந்து விடும் ….