பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா(பெர்சத்து) அவைத் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட் பேரரசர் துவாங்கு அப்துல் ஹாலிம் மு’வாட்சம் ஷாவைச் சந்தித்து அவரிடம் குடிமக்கள் பிரகடனத்தைச் சேர்ப்பித்தார்.
அச்சந்திப்பு நேற்று மாலை கெடாவில், இஸ்தானா அனாக் புக்கிட்டில் நிகழ்ந்ததாக மகாதிருக்கு அணுக்கமான வட்டாரம் தெரிவித்தது.
“அது இருவருக்குமிடையில் மட்டும் நிகழ்ந்த ஒரு சந்திப்பு…….மகாதிர் மாலை மணி 4.30க்குச் சென்றார். சந்திப்பு ஒன்றே கால் மணி நேரம் நீடித்தது”, என்று அவ்வட்டாரம் கூறியது.
மகாதிர் குடிமக்கள் பிரகடனத்துடன் 1.3 மில்லியன் பொதுமக்கள் கையொப்பமிட்ட ஆவணங்களின் நிழல்படங்களையும் கொண்டு சென்றாராம்.
பிரதமர் ஆலோசனையின் பெயரில் மாமன்னர்
செயல்படுவது இயல்பு
இஸ்தான நெகராவிலிருந்து செய்ய முடியாததை தன் மாநிலத்தில் இருந்து செய்வது தன்மானச் செயலாகப் படுகின்றது.
ஒன்றும் நடக்காது.