14வது பொதுத் தேர்தலில் பிஎன் அதிகாரம் மேலும் சரிவு காண்பதைத் தடுக்க பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சில மாற்றங்களைக் கொண்டுவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அம்மாற்றங்களில் நான்கு மாநிலங்களில் மந்திரி புசார்களை மாற்றுவதும் அடங்கும் என ஆங்கில நாளேடான த ஸ்டார் கூறியது. பாகாங், திரெங்கானு, கெடா, நெகிரி செம்பிலான் ஆகியவை அந்நான்கு மாநிலங்களாகும்.
அம்மாநிலங்களில் பிஎன் இயந்திரத்துக்குத் தலைமை தாங்க புதிய தலைவர்கள் தேவை எனப் பிரதமர் நினைக்கிறாராம்.
எல்லா தில்லு முள்ளும் ஆரம்பமாகி விட்டது. முடிவு ஆட்சி குரங்கு பிடியில் இருக்கும்.
பொறுத்தது பொறுத்தீங்க ! 14வது பொது தேர்தலில் ஆட்சி மாற்றம் வரும் வரைக்கும் பொறுத்திருக்க கூடாதா ? அதற்குள்ளே என்ன அவசரம் ?