அலி திஞ்சுமீது விசாரணை நடக்கும், அதே வேளை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்: கூலாய் எம்பிக்கு ஐஜிபி எச்சரிக்கை

mpஇன்ஸ்பெக்டர்-ஜெனரல்   அப்   போலீஸ்(ஐஜிபி),    காலிட்  அபு   பக்கார்      போலீஸ்   விசாரணைகளை  “அரசியலாக்க   வேண்டாம்”  என   எச்சரித்துள்ளார்.

குறிப்பாக,   பெர்சே    தலைவர்    மரியா     சின்    அப்துல்லாவுக்கு   மரண   எச்சரிக்கை   விடுத்த   முன்னாள்   படைவீரர்     முகம்மட்  அலி   பஹாரோமுக்கு    எதிராக   போலீஸ்    நடவடிக்கை    எடுக்காதது    ஏன்  என்று    கேள்வி    எழுப்பிய    கூலாய்  எம்பி    தியோ    நை   சிங்-கை  நோக்கி    அவர்   அவ்வாறு  எச்சரித்தார்.
“தியோ    நை   சிங்  (போலீசாரின்  வேலையை   வைத்து)  அரசியல்   அறிக்கைகள்   விட  வேண்டாம்  என   நினைவுறுத்துகிறேன்”,  என  காலிட்   இன்று   புக்கிட்   அமான்   போலீஸ்   தலைமையகத்தில்    செய்தியாளர்களிடம்    தெரிவித்தார்.

முன்னதாக    அவர்,  அலி  திஞ்சுமீது    போலீஸ்   விசாரணைகளைத்    தொடங்கி   விட்டதாகக்   கூறினார்.

“அதே   வேளை,  பெர்சே   5   பேரணியை     ஏற்பாடு    செய்து   நாடாளுமன்ற  ஜனநாயகத்துக்குப்   பாதகமான     செயல்களில்  ஈடுபடுவதற்காக   மரியா   சின்னையும்   விசாரித்து  வருகிறோம்”,  என்றார்.