சிலாங்கூரில் திடீர் தேர்தல் நடத்துவது குறித்து ஹராபான் ஆராய வேண்டும்: கிட் சியாங் வலியுறுத்து

limசிலாங்கூரில்     திடீர்     தேர்தல்     நடத்தலாமா     என்று  பக்கத்தான்   ஹராபான்   ஆராய    வேண்டும்.  சிலாங்கூரில்   ஆட்சி   அதிகாரம்    மீண்டும்   அம்னோவின்  கைக்குச்   செல்லும்  வகையில்      தேர்தல்   ஆணையம் (இசி)   தேர்தல்  தொகுதி    எல்லைகளைத்   திருத்தி   அமைத்திருப்பதால்   அவ்வாறு   செய்வது    அவசியமாகிறது     என்று   டிஏபி    நாடாளுமன்றத்    தலைவர்    லிம்  கிட்   சியாங்    கூறினார்.

தேர்தல்   தொகுதி  எல்லைகள்   திருத்தி    அமைப்பது   அம்னோ/பிஎன்னுக்குச்   சாதகமாக   உள்ளது   என்று   கூறப்படுவதை   மறுக்கும்    அம்னோ   துணை   அமைச்சர்      ரசாலி   இப்ராகிம்,  சிலாங்கூரில்    தொகுதி  எல்லைகளுக்குப்   பரிந்துரைக்கப்பட்டுள்ள   திருத்தங்களைப்    பார்க்க    வேண்டும்     என்று    லிம்    அறிவுறுத்தினார்.

“ரசாலிக்கும்   மற்ற   அம்னோ    தலைவர்களுக்கும்   உண்மை    தெரியும், ஆனால்,     தெரியாததுபோல்   நடிக்கிறார்கள்”,  என்றாரவர்.

இதனிடையே,  தேர்தல்   தொகுதி   எல்லைகளுக்குப்  பரிந்துரைக்கப்பட்டிருக்கும்   திருத்தங்களை  எதிர்த்து    வழக்கு    தொடுப்பது    குறித்து    டிஏபி    பரிசீலிப்பதாக    அதன்    ஏற்பாட்டுச்   செயலாளர்  அந்தோனி  லோக்    கூறினார்.

நேற்று,  கட்சியின்   மூன்றரை    மணி-நேரக்   கூட்டத்தில்    அது   குறித்து    விவாதிக்கப்பட்டதாக   அவர்    தெரிவித்தாக  ஓரியண்டல்   டெய்லி   கூறியது