ஐநா பேரவையில் நஜிப் கலந்துகொள்ளாதது வழக்கத்துக்கு மாறானதல்ல

dpmபிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்   ஐநா  பொதுப்  பேரவைக் கூட்டத்தில்   கலந்துகொள்ளாதது   வழக்கத்துக்கு   மாறானதல்ல   என்கிறார்   துணைப்  பிரதமர்    அஹ்மட்  ஜாஹிட்   ஹமிடி.

ஐநா   கூட்டத்துக்குச்  செல்லும்  மலேசியப்   பேராளர்   குழுவுக்குத்   தலைமைதாங்கும்   பொறுப்பைத்    துணைப்   பிரதமருக்குக்  கொடுப்பது     புதிதல்ல.  பல   நாடுகள்   அதைத்தான்    செய்துள்ளன   என்றாரவர்.

“வெளியுறவு   அமைச்சரோ   துணைப்  பிரதமரோ   மலேசியப்   பேராளராக   ஐநா  பேரவைக்   கூட்டத்தில்    கலந்து   கொள்வது   வழக்கத்திற்கு   மாறானதல்ல.

ஐநாவின்  193   உறுப்பு   நாடுகளில்   இதுவரை   54,   மலேசியாவின்    அண்டைநாடான  இந்தோனேசியா   உள்பட,     அவற்றின்    அரசாங்கத்     தலைவர்கள்   பேரவைக்   கூட்டத்தில்   கலந்துகொள்ளப்  போவதில்லை  என்று   அறிவித்திருப்பதை    அவர்    சுட்டிக்காட்டினார்.

“நீண்டகாலப்  பிரதமரின்   ஆட்சியின்போதுகூட    அவரைப்   பிரதிநிதித்து   மற்றவர்கள்தான்   அக்கூட்டத்தில்   கலந்து   கொண்டார்கள்”,  என  அஹ்மட்  ஜாஹிட்   கூறினார்.

“இது   சிறு  விசயம்.  இதைப்    பெரிதுபடுத்த    வேண்டாம்”,  என்றவர்  கேட்டுக்கொண்டார்.