பாஸ் பக்கத்தான் ஹராபான் கூட்டணியில் இல்லை என்பதால் சிலாங்கூரில் திடீர் தேர்தல் நடத்துவது ஆபத்தாக முடியலாம் என அமனா தொடர்பு இயக்குனர் காலிட் சமட் கூறுகிறார்.
“பாஸ்தான் பிரச்னை. பாஸ் இருப்பதால் நம் நோக்கம் (தேர்தல் வெற்றி) நிறைவேறும் என உறுதியாக சொல்ல முடியாது”, என இன்று கோலாலும்பூரில் அமனா தலைமையகத்தில் அவர் சொன்னார்.
முதலில் எல்லா நிலவரங்களையும் அலசி ஆராய வேண்டும் என்ராரவர்.
நேற்று டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங், தேர்தல் ஆணையம் தேர்தல் தொகுதி எல்லைகளில் திருத்தம் செய்திருப்பதற்குப் பதிலடியாக சிலாங்கூரில் திடீர் தேர்தல் நடத்துவது நன்றாக இருக்கும் என்றும் மொழிந்திருந்தார்.
ஆனால், சிலாங்கூர் மந்திரி புசார் அதை ஏற்கவில்லை. சிலாங்கூர் மக்கள் கடந்த பொதுத் தேர்தலில் நம்பிக்கையுடன் ஆளும் அதிகாரத்தை அளித்திருக்கிறார்கள், அவர்களின் நம்பிக்கைக்குத் துரோகம் இழைக்க முடியாது என்றாரவர்.

























