தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ் ஆள்குறைப்பு செய்வதை அடுத்து அதில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேறு வேலைகளைத் தேடிப் போக வேண்டிய நிலை ஏற்படலாம்.
பல வட்டாரங்களை மேற்கோள்காட்டி இவ்வாறு கூறும் வால் ஸ்திரிட் ஜர்னல் (டபள்யுஎஸ்ஜே) , பெட்ரோனாஸ் “எண்ணெய் விலைகள் குறைந்திருப்பதைச் சமாளிக்க பல நூறு ஊழியர்களை வேலை நிறுத்த முடிவு செய்திருப்பதாக” தெரிவித்தது.
பெட்ரோனாஸ் குழுமத்தில் உள்ள அத்தனை நிறுவனங்களிலும் ஆள்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
2015 முடிய 53,000 பேர் பெட்ரோனாசில் வேலை செய்ததாக அதன் ஆண்டறிக்கை தெரிவிக்கிறது.
ஆகஸ்டில் அதன் ஆதாயத்தில் 96 விழுக்காடு குறைந்ததாக பெட்ரோனாஸ் அறிவித்திருந்தது.