தேர்தல் தொகுதி சீரமைப்புக்கு மசீச, கெராக்கான் எதிர்ப்பு தெரிவிப்பதால் ஆகப் போவது எதுவுமில்லை

kit siangமசீசவும்   கெராக்கானும்    தேர்தல்   ஆணையத்தின்    தேர்தல்  தொகுதி   சீரமைப்புக்கு   எவ்வளவுதான்  எதிர்ப்பு   தெரிவித்தாலும்   பலனிருக்காது   என்கிறார்   டிஏபி   பெருந்   தலைவர்   லிம்  கிட்   சியாங்.

“அவற்றின்   தலைவர்கள்   ‘ஒருமித்த  கருத்து’   என்ற   கோட்பாட்டைக்  கைவிட்டு  பிஎன்னின்     உதவியாளர்கள்போலவும்   கீழ்ப்படிந்து   போவோராகவும்  நடந்து  கொள்வதால்   அவற்றின்(மசீசவும்   கெராக்கானும்)  கருத்து   எடுபடவா   போகிறது?”,  என்று  லிம்  இன்று   ஓர்    அறிக்கையில்   வினவினார்.

கிளந்தானில்   ஹுடுட்   சட்டம்    கொண்டுவருவதற்கு    வழிகோலும்   பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி   ஆவாங்கின்     சட்டவரைவு  ஒன்றை    அவசரமவசரமாக    நாடாளுமன்றத்தில்    தாக்கல்   செய்வதற்கு    அரசாங்கம்  ஏற்பாடு   செய்தபோதுகூட      அது    பற்றி   விவாதிக்க   பிஎன்  உச்சமன்றக்  கூட்டம்    கூட்டப்பட   வேண்டும்   என்று   கோருகின்ற   துணிச்சல்  மசீசவுக்கும்   கெராக்கானுக்கும்   இல்லை.
அந்த    வகையில்,   தேர்தல்    தொகுதி   சீரமைப்புப்   பற்றி    விவாதிக்க    வெள்ளிக்கிழமை     பிஎன்   உச்ச  மன்றம்  கூட்டப்படுவதால்   மட்டும்   எதுவும்    நடந்து   விடப்போவதில்லை   என்றாரவர்.