நேற்று பூச்சோங், பத்து 13, கம்போங் கினாங்கானில் குழாய் ஒன்று வெடித்ததால் சுபாங் ஜெயாவிலும் பூச்சோங்கிலும் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டிருக்கிறது.
பழுதுபார்க்கும் வேலைகள் நடைபெற்று வருவதாகவும் நாளை இரவு 7.30க்குப் பிறகு குடிநீர் கட்டம் கட்டமாக திறந்துவிடப்படும் என்றும் ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் தொடர்புத் தலைவர் அமின் லின் அப்துல்லா இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இதன் தொடர்பில் ஆகக் கடைசி நிலவரத்தை அறிந்துகொள்ள பயனீட்டாளர்கள் ‘mySYABAS’, www.syabas.com.my அகப்பக்கங்களுக்குச் செல்லலாம்.
– Bernama