மகாதிர் மன்னிப்பு கேட்கும் விவகாரம் குறித்து இனி பேச வேண்டாம் : நூருல் கோரிக்கை

nurulபிகேஆர்  நடப்பில்   தலைவர்    அன்வார்   இப்ராகிமின்   மகள்   நூருல்  நூகா,  முன்னாள்     பிரதமர்    டாக்டர்  மகாதிர்   முகம்மட்   தம்   தந்தையிடம்   மன்னிப்பு   கேட்கும்   விவகாரத்துக்கு   முற்றுப்புள்ளி   வைக்க  விரும்புகிறார்.

மகாதிர்  அன்வாரிடம்   மன்னிப்பு    கேட்க   வேண்டும்    என்று  முதன்முதலில்  கோரிக்கை   விடுத்தவரே  நூருல்  நூகாதான்.

“இந்த  விவகாரத்தை  இனியும்   விவாதிக்க    வேண்டியதில்லை.  என்   தந்தை   என்ன  முடிவெடுத்தாலும்    எங்களுக்கு    உடன்பாடுதான்.  அதுதான்  முக்கியம்.   இதை   ஏற்கனவே   ஓர்   அறிக்கையில்   கூறியுள்ளேன்”,  என்றாரவர்.